கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி சேலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
1,000 எடப்பாடி வந்தாலும் ஒரு ஓபிஎஸ்க்கு சமம் ஆகுமா?
கோத்தகரி அடுத்த கொடநாட்டில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தங்குவதற்காக சொகுசு பங்களா ஒன்று கட்டபட்டது. ஜெயலலிதா எப்போது ஓய்வு எடுக்க நினைத்தாலும் இங்கே தான் வருவார். இந்த சூழலில் ஜெயலலிதா மறைவு சம்பவம் ஏற்பட்டது. அதையடுத்து சசிகலாவின் தயவால் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராக ஆனார். அதையடுத்து ஊழல் வழக்கில் சசிகலா சிறை செல்ல நேர்ந்தது.
இத்தகைய சூழலில் கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த இரவு காவலாளி ஓம்பகதூர் சம்பவ இடத்தில் கொலை செய்யபட்டார். மேலும் பல முக்கிய ஆவணங்களும், விலை உயர்ந்த பொருட்களும் கொள்ளை போனது. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டனர்.
முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து இந்த கொலை மற்றும் கொள்ள சம்பவத்தை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். ஆனால் அவரது ஆட்சி காலத்தில் இந்த வழக்கு நத்தை வேகத்தில் நடந்தது. இந்த நிலையில் தமிழகத்தில்
ஆட்சி அமைத்த நிலையில் வழக்கு விசாரணை சூடுபிடித்தது. வழக்கு சிபிசிஐடிக்கு மாறப்பட்டது. கடந்த 6 ஆண்டு காலமாக இந்த வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவின் முக்கிய புள்ளிகள் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக ஆளும் திமுக அரசு இந்த வழக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது. அதேபோல் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதையும் சமாளிக்க தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார். மாநிலத்தில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் உள்ளது. அதேபோல் சிபிஐ என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு என்பது குறிப்பிடதக்கது. வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டால், பாஜகவின் தயவால் தன்னை காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி நினைப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்தசூழலில் கடந்த புதன்கிழமை டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பல்வேற் விஷயங்கள் குறித்து பேசினார். அதையடுத்து தற்போது கொடநாடு வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி சேலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் கடந்த ஓராண்டாக விசாரித்து வந்த நிலையில் அவர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி விசிட்டிற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளதாக அரசியல் நோக்கர் கூறுகின்றனர்.