சென்னை : இயக்குநர் அட்லீ இயக்கி வரும் ஜவான் திரைப்படம் பாரதிராஜா படத்தின் காப்பி என ஓர் சர்ச்சை கிளம்பியுள்ளது.
பிகில் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் தனது தடத்தைப்பதித்துள்ளார்.
அட்லீ சொன்ன கதை ஷாருக்கானுக்கு பிடித்துப்போக ஜவான் படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல், தனது மனைவியுடன் இணைந்து இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறார் ஷாருக்கான்
ஷாருக்கானின் ஜவான் : ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து ரசிகர்களின் பார்வை ஜவான் படத்தின் மீது உள்ளது. இப்படத்தில் ஷாருக், நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தியில் மேர்ரி கிறிஸ்துமஸ், மும்பைக்கர் என இரண்டு படங்களில் நடித்துள்ள விஜய்சேதுபதி ஜவான் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
விறுவிறுப்பான படப்பிடிப்பு : ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் நயன்தாரா, இதில் விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார். அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விரைவில் டிரைலர் : ஜவான் படத்தின் அதிரடியான க்ளைமேக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் ஷாருக்கான் பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், மொத்த படப்பிடிப்பும் இந்த மாத இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மே இறுதியில் இப்படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
மீண்டும் சர்ச்சையில் : ஜவான் திரைப்படம் விஜய்காந்த் நடித்த பேரரசு படத்தின் காப்பி என்று கூறப்பட்டு வந்த நிலையில், இத்திரைப்படம் பாரதிராஜா இயக்கத்தில் கமல் அப்பா மற்றும் மகன் நடித்த ஒரு கைதியின் டைரி திரைப்படத்தை, அட்லீ தனத பாணிக்கு மாற்றி பட்டி டிங்கரிங் பார்த்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இணையத்தில் பரவி வரும் தகவலால் ஆட்லீ மீண்டும் கதை சர்ச்சையில் சிக்கி உள்ளார்.