எலான் மஸ்க் போட்ட அடுத்த குண்டு… ட்விட்டரில் நியூஸ் படிக்கவும் இனிமே கட்டணம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே அதிரடிகளுக்கு பஞ்சமில்லை. 7,500 பேராக ஊழியர்களின் எண்ணிக்கையை வெறும் 1,500ஆக குறைத்தார். முக்கிய தலைகளை அதிரடியாக தூக்கி அதிர வைத்தார். ப்ளூ டிக் என்ற நம்பகத் தன்மையை கட்டணம் செலுத்தி யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்து குண்டை தூக்கி போட்டார்.

ட்விட்டரில் லேட்டஸ்ட் அறிவிப்பு

அதன்பிறகு நடந்த மாற்றங்களுக்கு எல்லையே இல்லை. இதன்மூலம் வருவாயை பெருக்கும் வழிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். அந்த வரிசையில் லேட்டஸ்டாக ஒரு அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். எல்லா விஷயங்களிலும் சாதக, பாதகங்கள் இருப்பது போல் இதிலும் இல்லாமல் இல்லை. முதலில் அறிவிப்பு என்னவென்று பார்க்கலாம்.

Employment: மாதம் 7 லட்சமா.. அள்ளிக்கொடுக்கும் டெக் நிறுவனங்கள்.. வாயை பிளக்க வைக்கும் சம்பவம்.!

செய்திகளை படிக்க கட்டணம்

அதாவது, செய்தி நிறுவனங்கள் தங்களின் செய்திகளை ட்விட்டரில் படிக்க கட்டணம் நிர்ணயிக்கும் வசதி அமலுக்கு வருகிறது. ஒரு செய்திக்கு ஒரு கிளிக் என்ற வகையில் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதற்கென்று மாதாந்திர சந்தா வசதி அறிமுகம் செய்யப்படும். அதன் வழியாக படித்தால் கட்டணம் என்பது குறைவாக இருக்கும். ஒருவேளை எப்போதாவது செய்திகளை படிப்பவர்கள் என்றால் அதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

Elon Musk

வருமானம் ஈட்ட வழி

இதன்மூலம் செய்தி நிறுவனங்களும், வாடிக்கையாளர்களும் என இரு தரப்பும் பயன்பெற முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒருபக்கம் செய்தி நிறுவனங்களுக்கு வருமானம் கிடைக்கும். மறுபக்கம் வாடிக்கையாளர்கள் செய்திகளை படிக்க கட்டணம் செலுத்த தயங்க வாய்ப்புள்ளது.

கலவையான விமர்சனங்கள்

ஒருகட்டத்தில் செய்திகளே வேண்டாம் என்று ஓரங்கட்டி வைத்து விட்டு வேறு சமூக வலைதளங்களை நோக்கி செல்லக்கூடும். அதுவும் எப்போதாவது படிக்க விரும்புவர்களுக்கு அதிக கட்டணம் எனக் கூறப்பட்டுள்ளது. இதென்ன பகல் கொள்ளையாக இருக்கிறது.

சீனா: குழந்தை பெத்துக்க இவ்வளவு சலுகைகளா.. வேற வழியில்ல ப்ரோ.!

எலான் மஸ்க் அதிரடி

அப்படி ஒரு செய்தியை படிக்க என் பாக்கெட்டை காலி செய்ய நான் தயாராக இல்லை எனக் காட்டமாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு Content Subscriptions-க்கு ஓராண்டிற்கு கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அதன்பிறகு 10 சதவீத சலுகை வழங்கப்படும். இது மிகப்பெரிய Content மற்றும் நீளமான வீடியோ பதிவிற்கும் பொருந்தும் என்று எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

இந்த சூழலில் தான் செய்தி நிறுவனங்கள் தங்களின் ஒவ்வொரு செய்தி வாசிப்பிற்கும் கட்டணம் நிர்ணயிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்னும் என்னென்ன குண்டுகளை போட எலான் மஸ்க் காத்திருக்கிறாரோ? என்ற கலக்கம் நெட்டிசன்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.