ஐரோப்பிய நாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது.
பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் பீப்பாய் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதியாகும் நிலையில், இது சவுதி அரேபியாவை விட சற்று அதிகமாக உள்ளதாக கெப்லர் தெரிவித்துள்ளது.
ரஷ்ய-உக்ரைன் போரால், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் தடை செய்துள்ள நிலையில், இந்தியா மலிவு விலையில் கச்சா எண்ணையை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்து வருகிறது.
இதனால், சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணையை இந்தியாவிடமிருந்து தற்போது ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்து வருகிறது.