பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 200 ஓட்டங்கள் குவித்துள்ளது.
கான்வே மிரட்டல் ஆட்டம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பாடியது. ருதுராஜ் கெய்க்வாட் 37 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
கான்வே அதிரடியில் மிரட்ட, தூபே சிக்ஸர், பவுண்டரியை விரட்டி 28 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் வந்த மொயீன் அலி (10), ஜடேஜா (12) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
Mass 💥🔥#CSKvPBKS #WhistlePodu #Yellove 🦁💛pic.twitter.com/F277rDd2hg
— Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2023
வாணவேடிக்கை காட்டிய தோனி
கடைசி ஓவரில் களமிறங்கிய கேப்டன் தோனி 4 பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுத்தார். குறிப்பாக கடைசி இரண்டு பந்துகளை அவர் சிக்ஸர்களாக மாற்றினார்.
தோனியின் விளாசலை பார்த்த ரசிகர்கள் மிரண்டுபோய் ஆர்ப்பரித்தனர். இதுதொடர்பான வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்துள்ளது.
Every six has a story to tell, this year! 🦁✨#WhistlePodu #CSKvPBKS #Yellove 💛 @msdhoni pic.twitter.com/6RsjfTrlmy
— Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2023