வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் பங்கேற்ற நிகழ்ச்சியில் தூங்கிய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குஜராத்தில், 2001 ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட கட்ச் மாவட்ட மக்களுக்கு புதிதாக கட்டப்பட்ட வீடு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பூபேந்திர படேல் பங்கேற்று பயனாளிகளுக்கு வீட்டை ஒப்படைப்பதற்கான ஆவணங்களை வழங்கினார்.
அப்போது, கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் மாநகராட்சி தலைமை அதிகாரி ஜிகர் படேல் என்பவர் தூங்கி கொண்டிருந்தார். இது அங்கிருந்த கேமராவில் பதிவானது. இதனையடுத்து, பணியின்போது கவனமின்மை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஜிகர் படேலை சஸ்பெண்ட் செய்து, மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி வாரியத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement