குரோஷியாவில் பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் குடிபோதையில் ஹோட்டல் பால்கனியில் இருந்து விழுந்து உயிருக்காக போராடி வருகிறார்.
மாடியில் இருந்த விழுந்த பிரித்தானியர்
குரோஷியாவின் பிரபல தீவுகளில் உள்ள ஹோட்டலின் பால்கனியில் குடிபோதையில் ஏற முயன்ற பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் தலைகீழாக தரையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார்.
30 வயதுடைய பிரித்தானிய சுற்றுலா பயணி தனது குடிபோதையில் செய்த குரும்புகளால் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார்.
Getty Images/iStockphoto
இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர், அவருக்கு உட்புகுத்தல் தேவை இருப்பதை உணர்ந்து, அட்ரியாடிக் துறைமுகமான ஸ்பிலிட்டில்(Adriatic port of Split) உள்ள பிராந்திய மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு சென்றனர்.
இதையடுத்து அவர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருவதாக குரோஷிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
குரோஷிய தீவுகள்
குரோஷியாவின் Hvar தீவு சமீபத்திய ஆண்டுகளில் சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் கவர்ச்சியான இடமாக மாறியுள்ளது.
Getty Images
மிகப்பெரிய திரைப் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கூட சமீபத்திய ஆண்டுகளில் குரோஷிய கடற்கரையில் குளிக்க கூடுவதை பார்க்க முடிகிறது.
பிரித்தானிய இளவரசர் ஹரி கூட இந்த தீவுகளுக்கு அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது.