குழந்தைகளின் பசியை தீர்க்க உணவு தேடி தவித்த தாய்! இறுதியில் நேர்ந்த சோகம்


புத்தளம்- பள்ளம, அடம்மன வெலிய பிரதேசத்தில் மின்னல் தாக்கி இரண்டு பிள்ளைகளின் இளம் தாயொருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடம்மன, எம்.ஏ. பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மல்காந்தி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரோகினி தன்னை

கணவனின் குடிப்பழக்கத்தால் கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளான இந்த இளம் தாய், தனது காணியில் உள்ள முந்திரி மரத்தில் ஒரு கிலோ முந்திரியை பறித்து விற்பனை செய்து தனது இரண்டு குழந்தைகளுக்கும் இரவு உணவு தயாரிப்பதற்காக வருகை தந்தபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

குழந்தைகளின் பசியை தீர்க்க உணவு தேடி தவித்த தாய்! இறுதியில் நேர்ந்த சோகம் | Sri Lanka Economic Lightning Strike

மின்னல் தாக்கம்

மின்னல் தாக்கத்திற்கு உள்ளான இந்த பெண்ணுக்கு 9 வயது மகளும், ஒரு வயது மூன்று மாத ஆண் குழந்தையும் உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளின் பசியை தீர்க்க உணவு தேடி தவித்த தாய்! இறுதியில் நேர்ந்த சோகம் | Sri Lanka Economic Lightning Strike

இந்த அனர்த்தத்தின் போது தாயுடன் மகளும் வந்திருந்ததாகவும், வேல் யாய ஆற்றின் ஊடாக வீட்டிற்கு அருகில் சென்றுக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும், மகள் தனது தாயை விட 15 மீற்றருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த போது, ​​எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதாகவும், அதில் சிக்கி பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.