ஆரூர் அருகே உள்ள கோவிலில் நடைபெற்ற திருவிழாவின்போது தேனீக்கள் பக்தர்களை கொட்டியதால் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தற்போது தமிழகமெங்கும் திருவிழா சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆரூர் அருகே உள்ள ஈட்டியம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள முனியப்பன் கோவிலில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருவிழாவில் மேளதாளங்களுடன் வானவேடிக்கைகளும் நடைபெற்றன.
அப்போது திருவிழாவில் வெடிக்கப்பட்ட வெடி ஒன்று தேன்கூட்டில் புகுந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக தேன் கூட்டில் இருந்து வெளியான தேனீக்கள் நூற்றுக்கணக்கான பக்தர்களை கொட்டியது. இதில் பெரியவர்கள் குழந்தைகள் சிறியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
காயமடைந்த அனைவருக்கும் அங்குள்ள மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கின்றனர். திருவிழாவிற்கு வந்த பக்தர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.