சூடானில் சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு இடையேயான சண்டை நிறுத்தம் மேலும் 72 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், தலைநகர் கார்ட்டூம் மற்றும் பிற பிராந்தியங்களில் ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
கார்ட்டூமில் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகேயும் இரு தரப்பினரிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சண்டை நிறுத்தத்தை மீறியதாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே ரெட் கிராஸ் அமைப்பின் முதல் மனிதாபிமான உதவிப்பொருட்கள் அடங்கிய விமானம் சூடான் சென்றடைந்தது.