பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் முறை பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, நாட்டு மக்கள் மத்தியில் ஒவ்வொரு மாதமும் உரையாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். அதற்கு, மனதின் குரல் (Mann Ki Baat) என்று பெயர் வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணிக்கு ஆல் இந்தியா ரேடியோ (AIR) மூலம் பிரதமர் மோடி பேசுவார். இதன் முதல் நிகழ்ச்சி அக்டோபர் 3, 2014ல் ஒலிபரப்பானது. முதலில் சாதாரணமாக பார்க்கப்பட்ட மனதின் குரல், படிப்படியாக அரசின் முக்கியமான நிகழ்ச்சியாக மாறியது.
மனதின் குரல் நிகழ்ச்சி
இதில் மோடி பேசும் விஷயங்கள் தலைப்பு செய்திகளாக மாறின. ஒருகட்டத்தில் எந்தெந்த விஷயங்களை பேசலாம் என்று மக்களிடம் இருந்தே கருத்துகள் கேட்கப்பட்டன. நாட்டு மக்களுக்கான அறிவுரைகளை தாண்டி பலரது வெற்றி கதைகளும் மனதின் குரல் நிகழ்ச்சியில் இடம்பெற்றன. டிஜிட்டல் யுகத்தில் ரேடியோவிற்கான முக்கியத்துவம் குறையவில்லை என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி உதாரணமாக திகழ்ந்தது. இயற்கை பாதுகாப்பு, கலாச்சார பெருமைகள்,
100வது எபிசோடு
விளையாட்டு வீரர்களின் சாதனைகள், இளைஞர்களின் புதுமைத் திறன், சமூக நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை, மாணவர்களின் எதிர்காலம் என மனதின் குரல் நிகழ்ச்சியில் இடம்பெறாத தலைப்புகளே இல்லை என்று கூறலாம். தற்போது 11 வெளிநாட்டு மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு எபிசோடும் 23 கோடி பேரால் கேட்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது எபிசோட் இன்றைய தினம் (ஏப்ரல் 30) ஒலிபரப்பப்படுகிறது.
ஐ.நாவில் ஒலிபரப்பாகிறது
அதாவது 100 மாதங்களாக தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்புக்குரிய நிகழ்வு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்திலும் ஒலிபரப்பப்படுவது கூடுதல் சிறப்பு. அதுமட்டுமின்றி 100வது எபிசோடின் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை புதிதாக வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மனதின் குரல் நிகழ்ச்சி மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.
தலைசிறந்த தலைவர்கள்
இந்தியாவின் நீண்ட பாரம்பரியத்தில் இதுவும் ஒன்றாகி இருக்கிறது. தலைசிறந்த சிந்தனையாளர்களின் வார்த்தைகள் நம்மை எப்போதும் ஊக்கப்படுத்தும். குறிப்பாக என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக இருந்துள்ளன. நம்முடைய நவீன இந்தியா ஆனது ராஜா ராம் மோகன் ராய், மகாத்மா காந்தி, ஈஸ்வர சந்திர வித்யாசாகர், ஜோதிபா பூலே, பாபாசாகேப் அம்பேத்கர்,
பன்முகத் தலைவர் மோடி
ஜெய் பிரகாஷ் நாராயண் ஆகியோரின் தாக்கம் இல்லாமல் ஈடேறி இருக்காது. அந்த வகையில் மோடியை எனக்கு நீண்ட காலமாகவே தெரியும். அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, பாதுகாவலர், ஆசிரியர், கண்டிப்பான நிர்வாகி, வலிமையான செயல்திறன், உந்துதலை ஏற்படுத்தும் சர்வதேச தலைவர் என பன்முகங்கள் கொண்டவர். இவரது மனதின் குரல் நிகழ்ச்சி 100வது எபிசோடை எட்டியிருப்பது மிகவும் மகிழ்ச்சியூட்டும் தருணம் என்று கூறினார்.