தமிழகத்தில் முதல்முறையாக ஏடிஎம் மெஷின் போல் மது மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யும் மையத்தை டாஸ்மாக் நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது.
ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.இதில் பணம் செலுத்தி மதுபான வகைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.பணம் செலுத்தினால் போதும் அவர்கள் கேட்ட மதுபானம் வந்துவிடும்.
வெளிநாடுகளில் உள்ளதுபோன்று பணம் செலுத்தினால் மது வழங்கும் தானியங்கி இயந்திரம் சோதனையில் அடிப்படையில் சென்னையில் நான்கு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் பணம் செலுத்தினால், தேவையான மதுபான வகை வந்துவிடும்.
21 வயதுக்கும் மேற்பட்டோர் மட்டுமே இந்த இயந்திரத்தின் மூலம் மதுபானம் பெற முடியும். அத்துமீறலை தடுப்பதற்காக இயந்திரத்தின் அருகில் டாஸ்மாக் விற்பனையாளர் ஈடுபட்டுள்ளனர். டாஸ்பாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, அதை தடுக்கவும் மாற்று ஏற்பாடுகள் செய்யும் வகையில் இந்த மதுபான தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மாலில் ஏடிஎம் இயந்திரம் வடிவில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செய்வதை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பான விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.