
பாத்ரூமில் அமர்ந்து லஞ்ச் சாப்பிட்டேன்: பிரியங்கா சோப்ரா
பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா சமீப காலமாகவே தனது பேட்டிகளில் பரபரப்பாக பல விஷயங்களை கூறி வருகிறார். குறிப்பாக பாலிவுட் திரையுலகில் இருந்து தன்னை ஓரங்கட்ட பலர் முயற்சி செய்தனர் என்று கூறி அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் பாத்ரூமில் அமர்ந்து பல நாட்கள் தனது மதிய உணவை சாப்பிட்டதாக இன்னொரு தகவலை கூறி அதிர்ச்சி அளித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இதுபற்றி அவர் கூறும்போது, தான் அமெரிக்காவில் தனது மேல்நிலைப்பள்ளி படிப்பை மேற்கொள்வதற்காக சென்றபோது அந்த கலாச்சாரத்துடன் தன்னால் உடனடியாக ஒன்ற முடியவில்லை என்று கூறியுள்ளார்.
குறிப்பாக கேண்டீனுக்கு சென்று தனக்கு தேவையான உணவை வாங்கி அங்கிருக்கும் மற்றவர்களுடன் அமர்ந்து உண்பதற்கு கூட ரொம்பவே கூச்சமாக இருந்தது என்றும் அதனால் அங்கே இருந்த ஒரு வெண்டிங் மிஷினில் இருந்து தனக்கு தேவையான சிப்ஸ் பாக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு அருகில் உள்ள பாத்ரூமிற்கு சென்று யாரும் அறியாத வண்ணம் தனது மதிய உணவை பல நாட்கள் சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா. பின் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கலாச்சாரத்திற்கு பழகி அமெரிக்க வாழ்க்கை முறைக்கு மாறி அங்குள்ளவர்களுடன் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு தன்னை மாற்றிக் கொண்டதாகவும் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.