பிடிஆர் ஆடியோ.. கேஸ் போடுங்க.. ஒரிஜினலே வெளியே வரும்.. அண்ணாமலை மிரட்டல் பேச்சு.. ஆஆ..

சென்னை:
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் ஆடியோ முற்றிலும் உண்மை எனக் கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இதுதொடர்பாக அவர் வழக்கு பதிவு செய்தால் ஒரிஜினல் ஆடியோ முழுவதையும் வெளியிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (பிடிஆர்) பேசியதாக அடுத்தடுத்து ஆடியோ கிளிப்புகள் வெளியாகி திமுகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தான் பிரதானமாக குறி வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

முதலில் சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆடியோவில், உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் அவர்களின் மூதாதையர்களை விட அதிகம் சம்பாதித்துவிட்டதாகவும், 10 கோடி, 20 கோடி என சுமார் 30 ஆயிரம் கோடி வரை அவர்களிடம் உள்ளதாகவும் பிடிஆர் கூறுவது போல ஒரு ஓடியோ பதிவாகி இருந்தது. பின்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாவது ஆடியோவை வெளியிட்டார்.

அதில், “ஒருநபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவு தெரிவித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும், மக்களையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு தனித்தனியாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு எல்லா முடிவுகளையும் எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தான் எடுக்கிறார்கள். இங்கு கட்சியே முதல்வரின் மகனும், மருமகனும்தான். இது ஒரு நிலையான மாடல் கிடையாது. இப்போது நான் விலகினால் கூட, அவர்கள் செய்தது அவர்களுக்கே எதிர்வினையாக திருப்பி அடிக்கும்… இவ்வாறு பிடிஆர் பேசியதாக அந்த ஆடியோ நீள்கிறது.

இதனிடையே, இந்த ஆடியோக்கள் போலியானவை என்றும், தன்னையும், தமிழக முதல்வரையும் பிரிக்க நடக்கும் அரசியல் சதி என்றும் அமைச்சர் பிடிஆர் விளக்கம் அளித்தார்.

இநநிலையில், சென்னையில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் ஆடியோ விவகாரம் குறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “இந்தியாவில் இருக்ககூடிய ஒரு ஆளும் கட்சியின் நிதியமைச்சர் பேசியதாக ஒரு ஆடியோ பதிவு முதலில் வந்தது. அதன் தொடர்ச்சியான இரண்டாவது ஆடியோவை நான் வெளியிட்டேன். இப்போதும் சொல்கிறேன். இதில் பிடிஆர் ஏதும் தவறு செய்யவில்லை. அவர் ஒப்புதல் வாக்குமூலம்தான் அளித்திருக்கிறார். நான் வெளியிட்ட DMK FILES-க்கு ஆதாரமாக அவரது வாக்குமூலம் உள்ளது.

இந்த ஆடியோ பொய்யானது எனக்கூறி நீங்கள் (பிடிஆர்) வழக்கு தொடர்ந்தால், ஒரிஜினல் ஆடியோவை நாங்கள் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறோம். பிடிஆர் யாருடன் பேசினார்.. எப்போது பேசினார் என அனைத்து தகவல்களும் இருக்கி்ன்றன. அதையும் நாங்கள் கொடுக்கிறோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.