வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் மோடி, ‘ மன் கி பாத் ‘ நிகழ்ச்சியின் 100வது நிகழ்ச்சியில் உரையற்றினார். இது தொடர்பாக தலைவர்கள் கூறியதாவது:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
மன் கி பாத் நிகழ்ச்சி மூலம், பிரதமர் மோடி, நாட்டின் மூலை, முடுக்குகளுக்குள் நுழைந்து மக்களையும், அரசையும் இணைக்கும் வகையில் பாலத்தை உருவாக்குகிறார். பல்வேறு பிராந்தியங்கள், மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் தொடர்பான கருத்துகள் மூலம் இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் அமித்ஷா கூறியுள்ளார்.
மோடியின் பேச்சை மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா கேட்டார். பிறகு அவர் கூறுகையில், மன் கி பாத் என்பது சாதாரணமான ரேடியோ நிகழ்ச்சி அல்ல. சமூக மாற்றத்திற்கான சிறந்த வாழ்ப்பு. நாட்டின் எதிர்காலத்தை மாற்றவும், சிறப்பான எதிர்காலம் உருவாக்கவும் மோடியின் பேச்சு முன்மாதிரியாக உள்ளது என்றார்.
ஜெய்சங்கர்
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள சோமர்சட் நகரில் இந்திய வம்சாவளியினருடன் இணைந்து பிரதமரின் பேச்சை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டார்.
பிறகு ஜெய்சங்கர் கூறுகையில், இந்தியாவை உலகத்துடனும், உலகத்தை பல வழிகளில் இந்தியாவுடனும் இணைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடியுடன், உள்ள சிறப்பான உறவு காரணமாக இந்திய வம்சாவளியினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியா வித்தியாசமானது. ஏனென்றால், ஜி20 நிகழ்ச்சிகளை 60 நகரங்களில் திருவிழாக்கள் போல் வேறு எந்த நாடும் நடத்தியது இல்லை. இதற்கு மோடி தான் காரணம் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement