மே தினம் வாழ்த்து… முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன முத்தான 10 விஷயங்கள்!

உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள். நம்மிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. உழைப்பை செலுத்தி புத்துலகு படைப்போம் வாருங்கள் என்று அறிஞர்கள் பலரும் கூறுவதை கேட்டிருக்கிறோம். இந்த உலகம் உழைப்பால் தான் இந்த அளவிற்கு மாறியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதற்கு காரணமான தொழிலாளர்களை நாள்தோறும் கொண்டாடி தீர்க்க வேண்டியது அவசியம்.

உழைப்பாளர்கள் தினம்

அதேசமயம் அவர்களின் நலனை உறுதி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. இந்நிலையில் மே ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் உலகத் தொழிலாளர்கள் தினம் மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இதையொட்டி முதல்வர்

வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், உழைக்கும் தோழர்களின் உன்னதத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே நன்னாளாம் இந்தப் பொன்னாளில்,

மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி

நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளத் தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த உழைப்பாளர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம் பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்களை அக்கறையோடு நிறைவேற்றி,

தொழிலாளர்கள் உரிமை

தொழிலாளர் வாழ்வில் முன்னேற்றமும், நிம்மதியும் காண அயராது பாடுபடும் இயக்கம் என்பதை உழைப்பாளர் சமுதாயம் நன்கு அறியும். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்துப் போராடி இருக்கிறோம். ஆட்சியில் இருக்கும் போதும் அவர்களுக்கான உரிமைகளைப் பேணும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துகிறோம்.

முத்தான 10 விஷயங்கள்

மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய அரசு விடுமுறைதொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ்தொழிலாளர் நலனைக் கருதி ஊக்கத் தொகைநிலமற்ற ஏழை வேளாண் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம்வேளாண் கூலிகளாகவும், வேறு பல தொழில்களில் உழைப்பாளிகளாகவும் திகழும் ஏழை, எளிய கருவுற்ற பெண்களுக்கு 6000 ரூபாய் நிதியுதவிதொழிலாளர் குடும்பங்களின் பசிப்பிணி போக்கிட ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசிஉழைப்பாளர்களின் உயிர்காக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்குடிசைகள் இல்லா கிராமங்கள்குடிசைப் பகுதிகளில்லா நகரங்கள் கொண்ட தமிழ்நாடு காணும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம்அமைப்பு சாராத் தொழிலாளர் நலவாரியங்கள்

தொழிலாளர்களுக்கு வாழ்த்துகள்

இவ்வாறு பல்வேறு முத்தான திட்டங்களை உழைக்கும் சமுதாயத்தின் நலனுக்காக நிறைவேற்றியது

ஆட்சி தான் என்பது வெள்ளிடை மலை. அந்த உறுதிப்பாடு குலையாமல் தொழிலாளர் நலன் காக்க, திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் அரசும் என்றென்றும் பாடுபடும் என்பதை இந்த நன்னாளில் தெரிவித்து, உழைக்கும் தோழர்கள் அனைவரும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.