
ராஷ்மிகா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்போது முதல் முறையாக முதன்மை கதாநாயகியாக வானவில் என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் சாந்த ரூபன் இயக்குகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தேவ் மோகன் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கடந்த ஏப்ரல் முதல் வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்போது முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.