சென்னை: நடிகர் அஜித் தொடர்ந்து ‘வி’ சென்டிமேன்ட் டைட்டிலையே தேர்வு செய்து வருகிறார் என ட்ரோல்கள் பறந்து கொண்ட நிலையில், துணிவு படத்தில் அதனை வினோத் மாற்றினார்.
நடிகர் விஜய் ‘வாரிசு’ என்கிற டைட்டிலில் இந்த ஆண்டு பொங்கலுக்கு படம் கொடுத்திருந்தார். இந்நிலையில், வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து ஏகே 62 படத்துக்கு ‘விடாமுயற்சி’ என்கிற டைட்டிலை நடிகர் அஜித் தேர்வு செய்துள்ளார்.
இந்நிலையில், விஜய் ரசிகர்கள் டைட்டில் லுக் போஸ்டர் அறிவிப்புக்கு கீழ் அந்த டைட்டிலை ட்ரோல் செய்து வருகின்றனர்.
லீக்கான ஏகே 62 டைட்டில்: லியோ படத்திற்கு கடைசி நேரத்தில் குருதி அல்லது குருதிப்புனல் என்கிற டைட்டில் தான் லீக்கானது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் செம சர்ப்ரைஸ் ஆக லியோ டைட்டிலை லோகேஷ் கனகராஜ் அம்பலப்படுத்தினார்.
ஆனால், நேற்று காலையிலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே அஜித்தின் ஏகே 62 படத்தின் டைட்டில் விடாமுயற்சி தான் என்பது சமூக வலைதளங்களில் கசிந்து விட்டது. கடைசியில் அதே தான் டைட்டில் என்கிற அறிவிப்பை லைகா தற்போது வெளியிட்டுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ஹேட்டர்கள் அதனை ட்ரோல் செய்து வருகின்றனர்.
விஸ்வரூப வெற்றி: விடாமுயற்சி டைட்டில் வெளியான நிலையில், ரசிகர்கள் போடுறா வெடிய.. படம் விஸ்வரூப வெற்றிடா என சோஷியல் மீடியாவையே அதிர வைத்து வருகின்றனர். லைகா நள்ளிரவில் அப்டேட் வரும் என அறிவிக்காத நிலையிலும், அஜித் ரசிகர்கள் தூங்காமல் கடைசி வரை அப்டேட்டுக்காக வெயிட் செய்து காத்துக் கொண்டிருந்த நிலையில், செம ட்ரீட் கிடைத்துள்ளது.
பறக்கும் ட்ரோல்கள்: மாப்ள ஒரு வழியா டைட்டில் சொல்லிட்டாங்க என விஜய் நடித்த வேலாயுதம் படத்தின் ஸ்டில்லை வைத்தே ஏகே 62 டைட்டிலை விஜய் ரசிகர்கள் ஓட்டி வருகின்றனர்.

எப்படி சொன்னாலும் செட் ஆகலையே: விடா முயற்சி தீபாவளி, விடாமுயற்சி நியூ இயர், விடாமுயற்சி பொங்கல், விடாமுயற்சி அப்டேட் கொடு ப்ரோ.. எப்படி சொன்னாலும் செட் ஆகலையே என விடாமுயற்சி டைட்டிலை செம கலாய் கலாய்த்து வருகின்றனர்.

வாரிசே பெட்டர்: இதுக்கு வாரிசு என்கிற டைட்டிலே பெட்டர்ல என அஜித்தின் ஏகே 62 படத்தின் டைட்டிலான விடாமுயற்சி டைட்டிலை விஜய் ரசிகர்கள் மரண பங்கம் செய்து ஏகப்பட்ட மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் வாழ்த்து: என்ன தான் சோஷியல் மீடியாவில் சண்டை போட்டு வந்தாலும், நடிகர் அஜித்தின் பிறந்தநாளுக்கும் விடாமுயற்சி டைட்டில் வெளியானதற்கும் உண்மையான விஜய் ரசிகர்கள் போட்டி சண்டைகளை மீறி வாழ்த்துக்களை தெரிவிப்போம் என தெரிவித்து அசத்தி வருகின்றனர்.
