இட்லி தோசையென்றாலே சட்னி தான் ஞாபகத்திற்கு வரும். அதிலும் அந்த சட்னியை பல்வேறு வகையாக செய்யலாம் என்று யாரும் அறிந்ததே.
புளிப்புடனும் சற்று காரத்துடனும் எப்படி சுவையான சட்னி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- புளி – பெரிய நெல்லிக்காய்
- காய்ந்த மிளகாய் – 10
- கறிவேப்பிலை – 1/4 கப்
- மல்லித்தூள் – 2 தே.கரண்டி
- கருப்பட்டி – சிறிய துண்டு
- நல்லெண்ணெய் – 2 தே.கரண்டி
- உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க
- கடுகு
- உளுத்தம்பருப்பு – 1/4 தே.கரண்டி
- கறிவேப்பிலை
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மல்லிதூள் சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும்.
- பின் மிக்ஸியில் இட்டு அதனுடன் புளி, கருப்பட்டி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
-
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் இட்டு தாளிக்க வேண்டிய பொருட்களைக் கொண்டு தாளித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
இறுதியாக அரைத்தெடுத்த கலவையை அதனுடன் சேர்த்து வதக்கி எடுத்தால் சுவையான புளிப்பான சட்னி தாயார்.