ஸ்பெயின் நாட்டில் கட்டுமான பணியாளர் ஒருவர் தாம் வாங்கிய ஒரு பழைய வீட்டில் இருந்து கத்தை கத்தையாக பணம் கண்டெடுத்த நிலையில், அதை செலவிடுவதில் ஏற்பட்ட சிக்கலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கத்தை கத்தையாக பணம்
வடமேற்கு ஸ்பெயினில் அமைந்துள்ள லுகோ பகுதியில் கட்டுமான பணியாளரான Toño Piñeiro என்பவர் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்த வீட்டை புதுப்பிக்கும் பணிகளை முன்னெடுத்து சென்ற அவருக்கு எதிர்பாராத வகையில் 47,500 பவுண்டுகள் மதிப்பிலான உள்ளூர் பணம் கிடைத்துள்ளது.
@EFE
நெஸ்கிக் கேன்களில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் அந்த தொகை அவரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவரது மகிழ்ச்சி கொஞ்ச நேரந்தான் நீடித்துள்ளது. கண்டெடுக்கப்பட்ட பணமானது ஸ்பானிஷ் பெசெட்டா தாள்கள்.
2002ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணய அலகு என யூரோவை சட்டப்பூர்வமாக அறிவித்த பின்னர், பெசெட்டா புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இருப்பினும், தமது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்கும் நோக்கில் பெசெட்டா தாள்களை யூரோவுக்கு மாற்ற முயன்றுள்ளார்.
ஏமாற்றமே மிஞ்சியுள்ளது
ஆனாலும், சில பணத்தாள்கள் மிக மிக பழைமையானது என்பதால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இருப்பினும், அந்த தொகையில் 30,000 பவுண்டுகள் அளவுக்கு அவர் மாற்றியுள்ளார்.
@EFE
அந்த தொகையில் தமது வீட்டுக்கான கூரை ஒன்றை தயார் செய்ய உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் அந்த வீட்டை வாங்கும் முன்னர் சுமார் 40 ஆண்டுகள் அந்த வீடானது கைவிடப்பட்ட நிலையில் இருந்ததாக Toño Piñeiro தெரிவித்துள்ளார்.
மேலும், செலவு செய்ய முடியாத எஞ்சிய பெசெட்டா தாள்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.