ஸ்மார்ட் வகுப்பில் திடீரென ஓடிய ஆபாசப்படம்!!

அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பில் திடீரென ஆபாசப்படம் ஓடிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் கோபிந்த்புரா என்ற கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில் ராஜீவ் குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு மூலம் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

அவர் தனது மொபைல் போனை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அவரது மொபைல் போனில் இருந்த ஆபாச படம் தெரியாமல் திரையில் ஒளிபரப்பானது. இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் உடனடியாக அதனை நிறுத்தினார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பந்த பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் ராஜீவ் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.