சேலம் அருகே 14 வயது சிறுமியை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை, ஏற்கனவே திருமணமாகி, குழந்தையும் உள்ள வினித் என்பவர் காதலிப்பதாக கூறி பழகி வந்த நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்து சென்ற வினீத், அவருடைய நண்பர்கள் விக்னேஷ், ஆகாஷ், சீனிவாசன், அருண்குமார் ஆகியோரை வரவழைத்து சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை தந்தையிடம் தெரிவிக்க, அவர் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, விசாரணை நடத்தி ஐந்து பேரையும் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.