5 நாட்கள் தொடர் விடுமுறை… 5 கோடிக்கும் அதிகமானோர் பயணம்… சீனாவில் நடந்த சுவாரசியம்

சீனாவில் தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 5 கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

சீனாவில் நேற்று முதல் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் முதல் நாளான நேற்று நாடு முழுவதும் ரயில், சாலைப்பயணம், கப்பல் மற்றும் விமானம் மூலம் பயணம் செய்துள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட 151.8 சதவீதம் அதிகம் என சீனப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் வடக்கு ரயில் நிலையம் நேற்று 2 லட்சத்து 88 ஆயிரம் பயணிகளை கையாண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.