ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Ajith Kumar: அஜித் குமாரின் சூப்பர் ஹிட் படமான வாலி ரிலீஸாகி 24 ஆண்டுகள் ஆகியிருப்பதை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
வாலிஎஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்த வாலி படம் கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தார் ஜோதிகா. ஓ சோனா பாடல் மூலம் பிரபலமானார். அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தார். அதில் ஒரு கதாபாத்திரம் தம்பி மனைவியை அடையத் துடிக்கும் வில்லத்தனமானது. அந்த நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார் அஜித்.
Ajith: அஜித் பற்றிய ரகசியம் சொன்ன எதிர்நீச்சல் மாரிமுத்து: தல ஏன் அப்படி பண்ணுச்சு!
24 ஆண்டுகள்நிக் ஆர்ட்ஸ் தயாரித்த வாலி படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். அந்த படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடும் வாலி படம் ரிலீஸாகி இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகிறது. அடேங்கப்பா வாலி படத்திற்கு 24 வயதா என ரசிகர்கள் வியக்கிறார்கள். மேலும் வாலி படம் குறித்து சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சிம்ரன்வாலி படம் குறித்து போஸ்டருடன் சிம்ரன் ட்வீட் செய்திருக்கிறார். அதை பார்த்த ரசிகர்களோ, படம் பற்றிய தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். ரசிகர்கள் கூறியிருப்பதாவது, வாலி படம் பற்றி நிறைய நினைவுகள் இருக்கிறது. நீங்கள் அப்பாவியாக நடித்தது, அண்ணன் அஜித்திடம் இருந்து தப்பிக்க போராடுவது எல்லாம் பிடிக்கும் என தெரிவித்துள்ளனர்.
விவேக்வாலி படத்தை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் எஸ்.எஸ். சக்ரவரத்தி நேற்று காலமானார். அதையும் ரசிகர்கள் சிம்ரனிடம் தெரிவித்துள்ளனர். மேலும் வாலி படத்தில் வந்த விவேக் பற்றியும் ஃபீல் செய்து கொண்டிருக்கிறார்கள். மரங்களை பார்க்கும்போது எல்லாம் விவேக் சார் நினைவு தான் வருகிறது. என்ன அவசரம் என்று சென்றுவிட்டார் என தெரியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.
அஜித் பிறந்தநாள்அஜித் குமார் நாளை தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனால் இன்று காலையில் இருந்தே ட்விட்டரை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ஏ.கே. 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை காலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வாலி கொண்டாட்டம் வேறு சேர்ந்துவிட்டது.
விடா முயற்சிAK62: என்னது இது தான் அஜித்தின் ஏ.கே. 62 பட தலைப்பா?!ஏ.கே. 62 படத்திற்கு விடா முயற்சி என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் லைகா நிறுவனம் அறிவிக்கும்வரை காத்திருக்க வேண்டியது தான். அஜித் தன் பிறந்தநாளில் வீட்டில் இருக்க மாட்டார். பைக் டூர் சென்றிருக்கும் அவர் நாளை பூட்டானில் இருப்பாராம். நோபாளத்து மக்கள் அஜித்துடன் சேர்ந்து புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.