ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
துணிவு படத்தை அடுத்து அஜித் குமார் நடிக்கவிருக்கும் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார், அனிருத் இசையமைப்பார் என லைகா நிறுவனம் கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.
வைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா!
பொங்கல் பண்டிகை முடிந்ததும் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் கதை பிடிக்கவில்லை என்று கூறி கடந்த ஜனவரி மாதம் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதையடுத்து மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியடவில்லை. மார்ச் மாதம் வரும் என்றார்கள். பின்னர் ஏப்ரல் மாதம் அறிவிப்பு வரும் என்றார்கள். இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளையொட்டி இன்று இரவு அல்லது நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் அஜித் படத்திற்கு விடா முயற்சி என்கிற தலைப்பை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. விடா முயற்சி அஜித்துக்கு பொருத்தமான தலைப்பு தான் என்றாலும் ஒரு மாஸ் எஃபெக்ட் வரவில்லை. அதனால் அஜித் பட தலைப்பு விடா முயற்சியாக மட்டும் இருந்துவிடவே கூடாது என்கிறார்கள் ரசிகர்கள்.
அஜித்தை வைத்து மகிழ்திருமேனி இயக்கும் அந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கவிருக்கிறார். படப்பிடிப்பு துவங்கும் முன்பே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.
ஏ.கே. 62 படத்தை இயக்க மகிழ்திருமேனிக்கு ரூ. 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அவர் முதல் முறையாக கோடிகளில் சம்பளம் வாங்கவிருக்கிறார்.
AK62:ஏ.கே. 62க்காக மகிழ் திருமேனிக்கு கிடைத்த லைஃப் டைம் செட்டில்மென்ட்: கோடி கோடியா கொட்டுதே
உதயநிதி ஸ்டாலினை வைத்து கலகத் தலைவன் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி மீண்டும் அவரை வைத்து படம் பண்ண ஆசைப்பட்டு ரெட் ஜெயண்ட் மூவீஸிடம் சென்றாராம். மாமன்னன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர மக்கள் சேவையில் ஈடுபடப் போகிறார் அமைச்சர் உதயநிதி என்று மகிழ்திருமேனியிடம் கூறியிருக்கிறார்கள்.
மகிழ்திருமேனியின் ஒர்க்கிங் ஸ்டைல் ரெட் ஜெயண்ட் மூவீஸுக்கு பிடித்துவிட்டது. இதையடுத்து லைகாவை தொடர்பு கொண்டு மகிழ்திருமேனியை பரிந்துரை செய்திருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் விலகவும், மகிழ் திருமேனியை பரிந்துரை செய்யவும் அவருக்கு ஒர்க்அவுட் ஆகிவிட்டது.
மகிழ்திருமேனி சொன்ன ஒன்லைனர் லைகாவுக்கு பிடித்துப் போகவே அஜித்தை அணுகி அனைத்தையும் சரி செய்துவிட்டார்கள். படத்தலைப்பை அறிவித்த கையோடு படப்பிடிப்பை துவங்கப் போகிறார்களாம்.
மே மாதம் 2வது வாரத்தில் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தன் ஸ்போர்ட்ஸ் பைக்கை எடுத்துக் கொண்டு டூர் கிளம்பிவிட்டார் அஜித்.
Ajith: பைக் டூர் போன இடத்தில் ஹோட்டலில் சமையல் செய்து அசத்திய அஜித்: வைரல் வீடியோ
அவர் நேபாளம், சிக்கிமில் ரைடு சென்றபோது ரசிகர்கள், ரசிகைகள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். தன் பிறந்தநாள் அன்று பூட்டானில் இருப்பாராம் அஜித் குமார்.
இதற்கிடையே அஜித் குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இன்றே ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள். அஜித் பிறந்தநாள், ஏகே 62 அறிவிப்பு வரும் நாள் என காலையில் இருந்தே ஒரே குஷியாக இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். இதனால் #AK62 என்கிற ஹேஷ்டேகும், #AjithKumar என்கிற ஹேஷ்டேகும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.