சிரியாவின் ISIS-ல் சேர்ந்ததற்காகவும், துப்பாக்கியுடன் போஸ் கொடுத்ததற்காகவும் பிரித்தானிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது தன்னை பேஷன் செல்வாக்கு உடையவராக வெளிக்காட்ட முயன்று வருகிறார்.
ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் சேர்ந்த பிரித்தானிய தாய்
பிரித்தானியா சேர்ந்த தரீனா ஷகில் (Tareena Shakil) என்ற பெண் கடந்த 2014 ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்காக பிரித்தானியாவில் இருந்து சிரியாவிற்கு தப்பி சென்றார்.
அங்கு சென்ற அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் முத்திரை கொண்ட ஆடை மற்றும் ஏகே 47 உடன் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிரவும் செய்தார்.
AFP/Getty
ஆனால் அங்கு மகிழ்ச்சியற்ற சூழ்நிலை ஏற்படவே, சிரியாவில் இருந்து துருக்கிக்கு தப்பிச் சென்றார், பின் அங்கிருந்து பிரித்தானியாவுக்கு வந்தார்.
இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு அவர் பிரித்தானியாவிற்கு திரும்பிய பிறகு ISIS பயங்கரவாத குழுவில் சேர்ந்ததற்காகவும், துப்பாக்கியுடன் போஸ் கொடுத்ததற்காகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
26 வயதில் சிரியாவிற்கு சென்று பின்பு பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட தரீனா ஷகில் 2019ல் விடுதலை செய்யப்பட்டார்.
INSTAGRAM/PA
பயங்கரவாதக் குழுவில் இணைந்ததற்காக வழக்குத் தொடரப்பட்ட முதல் பிரித்தானிய பெண் தரீனா ஷகில் ஆவார்.
சமூக செல்வாக்கு உடையவராக முயற்சி
இந்நிலையில் சிறையில் இருந்து வெளியேறிய தரீனா ஷகில், “ஃபேஷன் பிளாகர்”, “ஸ்ட்ரீட் ஸ்டைல்”, மற்றும் “ஸ்டைல் இன்ஸ்போ” போன்ற ஹேஷ்டேக்குகள் கீழ் பல்வேறு புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு நூற்றுக்கணக்கான இன்ஸ்டாகிராம் ரசிகர்களை குவித்து வருகிறார்.
இதற்கிடையில் அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், நான் என்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன், தவறுகளுக்கான தண்டனையும் அனுபவித்தேன் என கூறியுள்ளார்.
மேலும், “நான் என்னை ஒரு சமூக செல்வாக்கு உடையவராக மாற்றிக் கொள்ள முயற்சிக்கவில்லை, தனது செயல்கள் அவ்வாறு தோன்றினாலும், இத்தகைய செயல்களை(மகிழ்ச்சியை) கடினமான காலங்களிலும் நீங்கள் அதை செய்ய முடியும் என்பதை மக்களுக்கு காட்டவே முயல்கிறேன் என தெரிவித்துள்ளார்.