சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து அசத்திய ஜான் கொக்கன் இந்த ஆண்டு அஜித்தின் துணிவு படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அவரது மனைவி பூஜா ராமசந்திரன் கருவுற்று இருந்த நிலையில், அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே கர்ப்பகால போட்டோஷூட்களை போட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தார்.
மனைவி மீது இவ்வளவு அன்பு கொண்டவரா வேம்புலி என பலரும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அழகான ஆண் வாரிசுக்கு அப்பாவாகி உள்ளார் துணிவு வில்லன் ஜான் கொக்கன்.
பூஜா ராமசந்திரனுக்கு ஆண் குழந்தை பிறந்தது: எஸ்எஸ் மியூசிக் விஜேவாக இருந்த போதே பூஜா ராமசந்திரனுக்கு அவ்ளோ 90ஸ் கிட்ஸ் ஃபேன்ஸாக இருந்தனர். அவர் பேசும் ஆங்கிலம் புரியவில்லை என்றாலும் அவர் அழகை ரசிக்கவே அந்த சேனலை பலரும் பார்த்தனர்.
அதன் பிறகு பீட்சா உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருந்தார் பூஜா ராமசந்திரன். ஜான் கொக்கனை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்ட அவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தாயும் சேயும் நலம் என்பதை தெரிவிக்கும் வகையில் ஜான் கொக்கன் செம ஹேப்பியாக போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
கர்ப்பகால போட்டோஷூட்: பாகுபலி, கேஜிஎஃப் 2, சார்பட்டா பரம்பரை, துணிவு, வீர சிம்ஹா ரெட்டி என பல படங்களில் நடித்துள்ள ஜான் கொக்கன் மனைவி பூஜா கர்ப்பம் ஆனதில் இருந்தே அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். ஊட்டிக்கு அழைத்துச் சென்று நல்ல சூழலில் தனது குழந்தை பிறக்க வேண்டும் என பத்திரமாக பார்த்துக் கொண்ட நிலையில், ஒவ்வொரு தருணத்தையும் போட்டோக்களாக எடுத்து பதிவிட்டு அந்த தருணத்தை ஆவணப்படுத்தி வந்தனர்.
வளைகாப்பு முடிந்த பின்னரும் பல முறை பிரெக்னன்ஸி போட்டோஷூட் நடத்தி பூஜா ராமசந்திரனின் நிறைமாத வயிற்றை வெளிப்படையாக காட்டி இருந்தனர்.
குழந்தைக்கு என்ன பெயர்?: ரவுடி பேபி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஜான் கொக்கனின் மனைவி பூஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த குழந்தைக்கு கியான் கொக்கன் (KIAAN KOKKEN) எனப் பெயரிட்டுள்ளதாக ஜான் கொக்கன் அறிவித்துள்ளார்.
கியான் என்பதற்கு அர்த்தம் கடவுளின் அருள் மற்றும் அரசன் என்பது பொருள். மீரா வாசுதேவனை விவாகரத்து செய்த பின்னர் கடந்த 2019ல் பூஜா ராமசந்திரனை திருமணம் செய்துக் கொண்ட ஜான் கொக்கனுக்கு 4 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்துள்ள நிலையில், கடவுளின் அருள் என்றே அந்த குழந்தைக்கு பெயர் சூட்டி இருக்கின்றனர்.