ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
மறைந்த நடிகரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான என்.டி. ராமராவின் நூற்றாண்டு விழா விஜயவாடாவில் நடைபெற்றது.
நான் Rajini Sir Style-ல தான் நடிக்கிறேன் – Sivakarthikeyan fantastic speech
என்.டி. ராமராவின் மகனான பாலகிருஷ்ணா ஏற்பாடு செய்திருந்த அந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ரஜினி தெலுங்கில் பேசி அக்கட தேசத்து ரசிகர்களை அசத்தினார்.
மேடையில் ரஜினி பேசியதாவது,
என்.டி.ஆரின் தாக்கம் என்னிடம் அதிகம் இருக்கிறது. நான் ஹீரோவாக நடித்த முதல் படம் பைரவி. என்.டி.ஆரின் பாதாள பைரவி படம் நினைவுக்கு வந்து பைரவியில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். 1977ம் ஆண்டில் என்.டி.ஆருடன் சேர்ந்து டைகர் படத்தில் நடித்தேன்.
அவரின் பக்திப் படங்கள் பலவற்றை பார்த்திருக்கிறேன். குருச்சேத்திரா நாடகத்தில் துரியோதனனாக என்.டி.ஆர். ஸ்டைலை காப்பியடித்து நடித்தேன். அதை பார்த்து ரசிகர்கள் கைதட்டினார்கள். நீ சினிமா படங்களில் நடி என நண்பர்கள் கூறினார்கள். மிகப் பெரிய வில்லனாக வருவாய் என்றார்கள். அதை கேட்டு தான் நடிகனாக வேண்டும் என்கிற ஆசை வந்தது.
சினிமாவுக்கு வந்த புதிதில் வில்லனாக நடிக்க விரும்பினேன். ஹீரோ என்றால் மிகப் பெரிய பொறுப்பு. வில்லன் என்றால் சில நாட்கள் தான் ஷூட்டிங். அதனால் ஹீரோவாக அல்ல தொடர்ந்து வில்லனாக நடிக்கவே விரும்பினேன். பைரவி பட இயக்குநர் வந்து நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கேட்டபோது எனக்கு விருப்பமில்லை. ஆனால் பைரவி என்கிற பெயரை கேட்டதுமே சரி என்று சொல்லிவிட்டேன்.
பாலகிருஷ்ணா தன் பார்வையாலேயே எதிரிகளை கொன்றுவிடுவார். அவர் தூக்கி வீசினால் ஜீப் 30 அடி தூரத்தில் போய் விழும். சல்மான் கான், ஷாருக்கான், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் அத்தகைய காட்சிகளில் நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பாலகிருஷ்ணா நடித்தால் மட்டும் தான் ஏற்பார்கள்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஏனென்றால் பாலகிருஷ்ணாவை பாலகிருஷ்ணாவாக மக்கள் பார்க்கவில்லை. அவர் உருவத்தில் என்.டி.ராமராவை பார்க்கிறார்கள். அதனால் தான் பாலகிருஷ்ணாவுக்கு மட்டும் அது போன்ற காட்சிகள் கை கொடுக்கிறது. மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். பாலகிருஷ்ணாவுக்கு நல்ல மனசு என்றார்.
பாலகிருஷ்ணாவை ரஜினிகாந்த் புகழப் புகழ அரங்கில் இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகிவிட்டது.
வீடியோவை பார்த்த ரஜினி ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
சாதாரண உடையில் சென்றிருக்கிறார் தலைவர். இந்த எளிமை தான் அவரிடம் மிகவும் பிடித்த குணம். சக நடிகரை மேடையில் இப்படி பாராட்டிப் பேச தனி மனசு வேண்டும். தலைவருக்கு அந்த தங்க மனசு இருக்கிறது. இந்த குணத்திற்காகவே அவர் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார் என தெரிவித்துள்ளனர்.
கெரியரை பொறுத்தவரை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. அவர் தொடர்பான காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டார் நெல்சன்.
ஜெயிலர் பட வேலையை முடித்துக் கொண்டு தன் மகள் ஐஸ்வர்யாவின் லால் சலாம் படத்தில் நடிக்கிறார். ரஜினியின் தலைவர் 170 படத்தை ஜெய்பீம் படம் புகழ் ஞானவேல் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
Rajinikanth: ரஜினியை சந்தித்த கே.ஜி.எஃப். தயாரிப்பாளர், சுதா கொங்கரா: அப்போ லோகேஷ் படம்?
இதையடுத்து தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சுதா கொங்கரா ரஜினியை சந்தித்து கதை சொன்னதாகவும், அது தலைவருக்கு பிடித்துப் போனதாகவும் தகவல் வெளியானது. இதனால் தலைவர் 171 படத்தை சுதா கொங்கரா இயக்க வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.