சென்னை: 52வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் அஜித் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கப் போகும் ஏகே 62 படத்துக்கு விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்தின் 52வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ரசிகர்களின் அத்தனை திட்டுக்களையும் ட்ரோல்களையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்த லைகா நிறுவனம் நள்ளிரவில் செம சர்ப்ரைஸாக அஜித்தின் பிறந்தநாள் ட்ரீட்டை அவரது பல கோடி ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.
காலை முதலே லைகா நிறுவனத்திடம் ஒரு ப்ரீ ரிலீஸ் அறிவிப்பாவது வருமா? என அஜித் ரசிகர்கள் ஏங்கித் தவிக்க, வழக்கத்தை விட அதிகமாக இன்று பொன்னியின் செல்வன் 2 ப்ரமோஷன்கள் ட்வீட்டை லைகா நிறுவனம் வெளியிட்டு அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றியது.
அப்போ அவங்களுக்கு தெரியாது. இனிமே அஜித்தோட ஏகே 62 படத்தின் அப்டேட்கள் மலையாக குவியப் போகுது என்று.. ஆனால், அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஷார்ப்பா ரசிகர்களை ஏங்க விடாமல் அதிகாரப்பூர்வ டைட்டில் வெளியாகி பிறந்தநாள் கொண்டாட்டத்தை களைகட்ட வைத்து விட்டது.
அஜித் ரசிகர்கள் விடிய விடிய உறங்காமல் ‘விடாமுயற்சி’ டைட்டிலை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர். ஏகப்பட்ட சாதனைகளை செய்து லியோ, கங்குவா டைட்டில் சாதனைகளை முறியடிக்க முடிவு கட்டி களத்தில் குதித்துள்ளனர்.
மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நடிகர் அஜித்துக்கு சரியான பொருத்தமான தலைப்பாக ‘விடாமுயற்சி’ என்கிற டைட்டில் வந்துள்ளது என்றும் இந்த டைட்டில் தான் காலையிலேயே லீக் ஆகிடுச்சேப்பா.. என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

விடாமுயற்சி டைட்டில் லுக் போஸ்டரில் லொகேஷன் சிம்பிள் டைட்டிலியேயே உள்ள நிலையில், எதையோ ஒன்றை தேடுவதாக கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள அஜித்தின் 62 படமான விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மற்றபடி படத்தின் ஹீரோயின், வில்லன் மற்றும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பி எப்போ ஆரம்பிக்கும் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில், ஒவ்வொரு அப்டேட்டாக கொடுத்து அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் லைகா ஆழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.