Vijayakanth – அலம்பல் செய்த மன்சூர் அலிகான்.. அடக்கி வைத்த கேப்டன் விஜயகாந்த்

சென்னை; Vijayakanth (விஜயகாந்த்) ஷூட்டிங் ஸ்பாட்டில் அலம்பல் செய்த மன்சூர்ல் அலிகான் விஜயகாந்த்திடமிருந்து வந்த ஒரு ஃபோனை அடுத்து பெட்டிப்பாம்பாக அங்கிய விஷயம் தெரியவந்திருக்கிறது.

கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்த அந்தப் படத்தில் விஜயகாந்த்தான் ஹீரோவாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே வீரப்பன் சாயலை ஒத்திருந்த கதாபாத்திரத்தை ஏற்று அதில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் மன்சூர் அலிகான். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. பல முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

அரசியலில் மன்சூர் அலிகான்: காலப்போக்கில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அந்த சமயத்தில் அரசியலிலும் குதித்தார் அவர். நாம் தமிழர் கட்சியில் இணைந்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு திடீரென அக்கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார்.

வைரலான மன்சூர்: மன்சூர் அலிகான் பேட்டி கொடுக்கும்போது அவர் பேசும் முறையும் , அவரது பாடி லாங்குவேஜும், அவரது நடவடிக்கைகளும் சிரிப்பு வரும்படி அமைந்ததால் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானார் அவர். அவர் அவ்வாறு செய்யும் வீடியோக்களை நெட்டிசன்கள் சலிக்காமல் பார்த்தும், பகிர்ந்தும் வந்தனர்., இதனையடுத்து மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார் மன்சூர் அலிகான்.

ரசிகரான இயக்குநர்: தமிழ் சினிமாவில் இப்போது பிரபலமான இயக்குநர் என்று பெயர் எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானை ரசிக்கக்கூடியவர். ஒரு பேட்டியில் மன்சூர் அலிகான் செய்ததை பல பேட்டிகளில் லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார். மேலும், கைதி படத்தின் கதையே முதலில் அவருக்காக எழுதி அவரிடம் சொல்வதற்குத்தான் லோகேஷ் திட்டமிட்டிருந்தார் என்பதும் அனைவரும் அறிந்தது.

Cheyyaru Balu Opens Up About Vijayakanth And Mansoor Ali khan

லியோவில் மன்சூர்: இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மன்சூர் அலிகான் எப்போது நடிக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. அதற்கு லியோவில் பதிலளித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். விஜய் ஹீரோவாக நடிக்கும் அந்தப் படத்தில் மன்சூர் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனால் விஜய்யுடன் மன்சூர் அலிகான் எப்படி நடித்திருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.

அலம்பல் செய்த மன்சூர் அலிகான்: இந்நிலையில் மறுமலர்ச்சி படப்பிடிப்பு தளத்தில் அலமல் செய்த மன்சூர் அலிகான் விஜயாகாந்த்திடமிருந்து வந்த ஒரு ஃபோன் காலை அடுத்து பெட்டிப் பாம்பாக பம்மியிருக்கிறார். அதாவது, மறுமலர்ச்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மன்சூரை ஷார்ட் ரெடியானதும் அழைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் லாட்ஜில் தங்கிக்கொண்டு வரமாட்டேன் , போயா அதெல்லாம் வரமுடியாது என கூறியிருக்கிறார். அது ஏன் என்று படக்குழுவினருக்கு தெரியவில்லையாம்.

விஜயகாந்த்திற்கு பம்மிய மன்சூர்: உடனே ங்கிருந்து விஜயகாந்திற்கு தகவல் போயிருக்கிறது. அதனையடுத்து லாட்ஜுக்கு ஃபோன் செய்த விஜயகாந்த் மன்சூர் அலிகானிடம் கொடுக்க சொல்லியிருக்கிறார். ஃபோனில் பேசிய விஜயகாந்த், ‘ஒழுங்கா ஷூட்டிங் போக மாட்டீயா? போகலைனா என்ன ஆவனு தெரியும்ல, நடிக்க முடியாது பார்த்துக்கோ’ என்று சொல்லி மிரட்டியிருக்கிறாராம். அதன் பிறகே மன்சூர் அலிகான் ஷூட்டிங்கிற்கு போனாராம். இதனை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.