CSKvMI: தவான் குடும்பத்தையே பச்சை குத்திய தீவிர ரசிகர்; மஞ்சள் கூட்டத்தில் கலக்கிய சிகப்பு மனிதர்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டி இன்று நடைபெற்றது. சேப்பாக்கத்தில் ஒரு போட்டி நடைபெறுகிறதென்றால் அங்கே முழுவதுமாக மஞ்சள் கூட்டத்தை மட்டுமே பார்க்க முடியும். ஆயிரக்கணக்கில் கூடும் அத்தனை பேரும் தோனி ரசிகராகவும் சிஎஸ்கே ரசிகராகவுமே இருப்பார்கள். ஆக, போட்டி தினங்களில் சேப்பாக்கம் மைதானத்திற்குள் மற்ற ரசிகர்களைக் காண்பதே அரிது. அப்படி ஒரு அரிதான விஷயத்தை சென்னை vs பஞ்சாப் போட்டியில் நாம் கண்டடைந்தோம். சென்னை ரசிகர்கள் சூழ தில்லாக … Read more

திருச்சி அருகே விவசாய சங்க நிர்வாகி வெட்டிக் கொலை.. போலீசார் தீவிர விசாரணை!

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே விவசாய சங்க நிர்வாகி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். லால்குடி அருகே பி.கே.அகரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முக சுந்தரம், தமிழ்நாடு விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாநில செயலாளராக இருந்து வந்தார். குடும்ப பிரச்சனையில் மனைவி பிரிந்து சென்றுவிட, வீட்டில் தனியாக வசித்து வந்த சண்முகசுந்தரத்திற்கு, அருகில் வசிக்கும் உறவினர்கள் உணவு கொடுத்து வந்துள்ளனர். அதன்படி காலை உணவு கொடுக்க வந்த உறவினர்கள், வீட்டின் படுக்கையில் சண்முகசுந்தரம் கொலை … Read more

மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் போலீஸார் – கூடுதல்  டிஜிபி சங்கர் தகவல்

மதுரை: சித்திரை திருவிழா பாதுகாப்புப் பணியில் சுமார் 5 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழக கூடுதல் டிஜிபி சங்கர் தெரிவித்துள்ளார். தமிழக கூடுதல் டிஜிபி சங்கர் சனிக்கிழமை மதுரை வந்தார். சித்திரை திருவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். இதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடக்குமிடம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார். மாநகர … Read more

உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல ரவுடிகள் முக்தாருக்கு 10 ஆண்டு, அப்சல் எம்.பி.க்கு 4 ஆண்டு சிறை!

லக்னோ: உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம் முகமதாபாத் சட்டப் பேரவைத் தொகுதியில் பிரபல ரவுடி முக்தார் அன்சாரி குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடந்த 2002-ம் ஆண்டு முகமதாபாத் தொகுதி தேர்தலில் முக்தார் அன்சாரியின் அண்ணன் அப்சல் அன்சாரி போட்டியிட்டார். ஆனால், பாஜக வேட்பாளர் கிருஷ்ணானந்த் ராய் வெற்றி பெற்றார். அதன்பின் கடந்த 2005 நவம்பர் 29-ம் தேதி கிருஷ்ணானந்த் ராய் உட்பட 7 பேர் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக முக்தார், அப்சல் உள்ளிட்டோர் மீது … Read more

பிடிஆர் ஆடியோ.. கேஸ் போடுங்க.. ஒரிஜினலே வெளியே வரும்.. அண்ணாமலை மிரட்டல் பேச்சு.. ஆஆ..

சென்னை: தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் ஆடியோ முற்றிலும் உண்மை எனக் கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இதுதொடர்பாக அவர் வழக்கு பதிவு செய்தால் ஒரிஜினல் ஆடியோ முழுவதையும் வெளியிடுவோம் எனத் தெரிவித்துள்ளார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (பிடிஆர்) பேசியதாக அடுத்தடுத்து ஆடியோ கிளிப்புகள் வெளியாகி திமுகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தான் பிரதானமாக குறி வைக்கப்பட்டு … Read more

எலான் மஸ்க் போட்ட அடுத்த குண்டு… ட்விட்டரில் நியூஸ் படிக்கவும் இனிமே கட்டணம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே அதிரடிகளுக்கு பஞ்சமில்லை. 7,500 பேராக ஊழியர்களின் எண்ணிக்கையை வெறும் 1,500ஆக குறைத்தார். முக்கிய தலைகளை அதிரடியாக தூக்கி அதிர வைத்தார். ப்ளூ டிக் என்ற நம்பகத் தன்மையை கட்டணம் செலுத்தி யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்து குண்டை தூக்கி போட்டார். ட்விட்டரில் லேட்டஸ்ட் அறிவிப்பு அதன்பிறகு நடந்த மாற்றங்களுக்கு … Read more

Leo: லியோ படத்தை பற்றி பிரபல நடிகர் கூறிய தகவல்..உச்சகட்ட ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இணையத்திலும் சரி, கோலிவுட் வட்டாரத்திலும் சரி எங்கு பார்த்தாலும் லியோ படத்தை பற்றிய பேச்சுதான் போய்க்கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் என்றே சொல்லலாம். பொதுவாக விஜய் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட லியோ படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அதற்கு விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்ததே காரணம். … Read more

அஜித்தை டாப் ஹீரோவாக மாற்றிய 10 மெகா ஹிட் படங்கள் – பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு!

Actor Ajith 52nd Birthday: அஜித் தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரை நட்சத்திர நடிகராக தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திய டாப் 10 படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சூடானில் சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் துப்பாக்கிச் சூடு

சூடானில் சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு இடையேயான சண்டை நிறுத்தம் மேலும் 72 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்ட போதிலும்,  தலைநகர் கார்ட்டூம் மற்றும் பிற பிராந்தியங்களில் ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. கார்ட்டூமில் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகேயும் இரு தரப்பினரிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. சண்டை நிறுத்தத்தை மீறியதாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே ரெட் கிராஸ் … Read more

“மக்களின் உணர்வின் பிரதிபலிப்பே மனதின் குரல் நிகழ்ச்சி” 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் உரை..!

மன் கி பாத்-ன் 100-வது அத்தியாய ஒலிபரப்பில் பேசிய பிரதமர் மோடி, 100 கோடி மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே மனதின் குரல் நிகழ்ச்சி என தெரிவித்துள்ளார். மக்களிடம் நேர்மறை சிந்தனைகளை மனதின் குரல் நிகழ்ச்சி கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டார். கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி தொடங்கப்பட்ட மனதின் குரல் நிகழ்ச்சி, இன்று 100-வது அத்தியாயத்தை எட்டியுள்ளது. மனதின் குரல் தனக்கு ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல எனக்கூறிய பிரதமர், அது ஒரு நம்பிக்கை எனவும், மக்களுக்கு … Read more