கடைசி 2 பந்துகளில் சிக்ஸர்களை தெறிக்கவிட்ட தோனி! சென்னை அணி 200 ஓட்டங்கள் குவிப்பு..மிரட்டல் வீடியோ

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 200 ஓட்டங்கள் குவித்துள்ளது. கான்வே மிரட்டல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பாடியது. ருதுராஜ் கெய்க்வாட் 37 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். கான்வே அதிரடியில் மிரட்ட, தூபே சிக்ஸர், பவுண்டரியை விரட்டி 28 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் … Read more

நிர்வாணமாக தப்பிய இளம்பெண்.. கணவரை தாக்கி பலாத்காரம் செய்த 7 பேர் கும்பல்.. ஜார்கண்ட்டில் அதிர்ச்சி

India oi-Nantha Kumar R ராஞ்சி: ஜார்கண்ட்டில் கணவருடன் சென்ற இளம்பெண்ணை தாக்கி புதருக்குள் இழுத்து சென்று 7 பேர் கும்பல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த கும்பலிடம் இருந்து போராடி ஆடை எதுவுமின்றி அந்த இளம்பெண் தப்பித்து ஓடிவந்த தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கூட ஆங்காங்கே தினமும் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றசம்பவங்கள் … Read more

குஜராத் முதல்வர் நிகழ்ச்சியில் தூங்கிய அதிகாரி சஸ்பெண்ட்| Gujarat Officer Suspended For Dozing Off At Chief Ministers Event: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆமதாபாத்: குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் பங்கேற்ற நிகழ்ச்சியில் தூங்கிய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். குஜராத்தில், 2001 ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட கட்ச் மாவட்ட மக்களுக்கு புதிதாக கட்டப்பட்ட வீடு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பூபேந்திர படேல் பங்கேற்று பயனாளிகளுக்கு வீட்டை ஒப்படைப்பதற்கான ஆவணங்களை வழங்கினார். அப்போது, கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் மாநகராட்சி தலைமை அதிகாரி ஜிகர் படேல் என்பவர் தூங்கி கொண்டிருந்தார். இது அங்கிருந்த கேமராவில் … Read more

குக் வித் கோமாளியில் நாகேஷின் பேரன்! சினிமாவில் ரீ-என்ட்ரி கிடைக்குமா?

குக் வித் கோமாளி சீசன் 4 மக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. 10 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் தற்போது 5 பேர் எலிமினேட்டாகிவிட்டனர். இந்நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் இரண்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். முதலாவதாக நடிகரும் கலை இயக்குனருமான கிரண் என்ட்ரி கொடுத்தார். அவரை தொடர்ந்து நாகேஷின் பேரனும், ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் வந்துள்ளார். 2014ம் ஆண்டு வெளியான கல்கண்டு படத்தில் ஹீரோவாக அறிமுகமான கஜேஷ் தொடர்ந்து படங்கள் எதுவும் … Read more

Ajith – அஜித்தின் ஸ்டார் வேல்யூவுக்கு யார் காரணம் தெரியுமா?.. இயக்குநர் சொன்ன சீக்ரெட்

சென்னை: Ajith (அஜித்) நடிகர் அஜித் குறித்து இயக்குநர் V.Z.துரை பேசியிருக்கும் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. சினிமாவில் யாரின் துணையுமின்றி நுழைந்து இன்று தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருப்பவர் அஜித்குமார். அவரது கேரியர் ஆரம்பத்தில் அஜித்திற்கு துணையாக நின்றவர்களில் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி முக்கியமானவர். அஜித்தின் ராசி, வாலி, வில்லன், வரலாறு, சிட்டிசன், ரெட், முகவரி, ஆஞ்ச்நேயா, ஜீ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் சக்கரவர்த்தி. இரண்டு பேரும் நெருங்கி பழகியவர்கள். நிக் ஆர்ட்ஸ் … Read more

பாஜக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது – பிரியங்கா காந்தி

பாஜக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது – பிரியங்கா காந்தி பெங்களூரு, கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்தநிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் கர்நாடகவே நாளுக்கு நாள் பரபரப்பாக காண்கிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கானாபூரில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலளார் பிரியங்கா காந்தி பேசியதாவது:- “பாஜக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. … Read more

பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு..!

சென்னை, 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் ஆட வேண்டும். லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு … Read more

டுவிட்டரில் செய்திகளைப் படிக்க வேண்டுமா? அடுத்த மாதம் முதல் கட்டணம்..!!

வாஷிங்டன், கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தின் பொறுப்பேற்ற எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறார். இந்நிலையில் அடுத்த மாதம் முதல் செய்தி நிறுவனங்கள் டுவிட்டரில் தங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்க பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அடுத்த மாதம் முதல் டுவிட்டர் தளம் செய்தி நிறுவனங்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் பயனர்களிடம் ஒரே கிளிக்கில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும்” என்று … Read more

தலித்துகளுக்கு எதிராக செயல்படும் தமிழக காவல்துறை.. திருமாவளவன் ஆவேசம்..!!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறையினர் ஒடுக்கு முறையை கையாள்வதாக திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற விசிக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார். தமிழகத்தில் காவல்துறையினர் விசிகவினர் மீது ஒடுக்கு முறையை கையாள்வதும் அதனை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் விசிகவினர் 60 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு … Read more

சென்னையில் அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!!

ராயப்பேட்டையில் உள்ள கட்டடம் ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ரங்கையா கார்டன் பகுதியில் ‘ரியல் டவர்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு வணிக வளாகம்போல் செயல்பட்டு வருகிறது. இதில் ஐடி நிறுவனங்கள், கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கட்டடத்தின் மாடியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென கட்டடத்திற்கு மேல் மொட்டை மாடிபகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. மாடியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்ததாக தகவல் … Read more