துணை முதல்வர் பதவிக்கு உங்களுக்கா… வந்து விழுந்த கேள்வி – உதயநிதி சொன்ன கூலான பதில்!

Udhayanidhi Stalin: வருமான வரித்துறை சோதனை போன்ற எந்த சவால்களையும் நாங்கள் எதிர்கொள்ள தயார் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பதிவேற்பதாக வெளியான தகவல் குறித்தும் பதிலளித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக மாறிய இந்தியா..!

ஐரோப்பிய நாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது. பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் பீப்பாய் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதியாகும் நிலையில், இது சவுதி அரேபியாவை விட சற்று அதிகமாக உள்ளதாக கெப்லர் தெரிவித்துள்ளது. ரஷ்ய-உக்ரைன் போரால், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் தடை செய்துள்ள நிலையில், இந்தியா மலிவு விலையில் … Read more

"எஸ்.எஸ்.வாசன் சார் பேர்ல விருது வாங்கறது பெருமையா இருக்கு"- விகடன் மேடையில் நெகிழ்ந்த மணிரத்னம்

ஆனந்த விகடன் சினிமா விருதுகளின் முக்கிய விருதான எஸ்.எஸ்.வாசன் விருது இம்முறை இயக்குநர் மணிரத்தினத்திற்கு வழங்கப்பட்டது. கமல்ஹாசன் இந்த விருதை வழங்கினார். பாடலாசிரியர் விவேக் விருது விழாவில் இந்த குறிப்பிட்ட நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். கமல், மணிரத்னம், விவேக் முதலில் மேடையேறிய கமல் ‘உயிரே, உறவே, தமிழே… வணக்கம்’ என தனக்கேயான பாணியில் பேசத்தொடங்கினார். “எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து சினிமால இருக்கேன். அப்போதிலிருந்து எஸ்.எஸ் வாசன் சாரை பார்த்துட்டு இருக்கேன். அவர் வீட்டு வாசல்ல நின்னு … Read more

மாதவிடாய் காலத்தில் தப்பி தவறியும் கூட இந்த உணவுகளை சாப்பிட்டுவிடாதீர்கள்!

பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் எது செய்ய வேண்டும் எது செய்ய கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதிலும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் உணவுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். மாதவிடாய் பெண் கருத்தரிக்காத நேரங்களில் மடிப்புகளில் உள்ள தேவையற்ற இழையங்களும், அவற்றுடன் சேர்ந்து மடிப்புக்கள் இருக்கும் நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே கழிவாக வருகின்றது. இதுவே மாதவிடாய் சூழற்சி எனப்படும். மாதவிடாய் காலத்தில் என்ன உணவு சாப்பிட வேண்டும்? வெள்ளை பாண், பாஸ்தா, … Read more

உலகளவில் 68.70 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.63 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.95 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவங்க தான் புது பயாலஜி டீச்சரா? வைரலாகும் ஹீரோயின் என்ட்ரி

டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீசன் 1 வெற்றியை தொடர்ந்து சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில், பல புதிய நட்சத்திரங்களை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அறிமுகம் செய்து வைத்து வருகின்றனர். அந்த வகையில், காற்றுக்கென்ன வேலி தொடரின் மூலம் இளைஞர்களின் க்ரஷ் லிஸ்ட்டில் இடம்பிடித்த ப்ரியங்கா, கனா காணும் காலங்கள் சீசன் 2விலும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால், இம்முறை மாணவியாக இல்லாமல் பயாலஜி டீச்சராக திலோத்தமா என்ற … Read more

Leo: விஜய்யின் லியோவில் இணையும் விக்ரம் பட வில்லன்… லோகேஷ் யுனிவர்ஸில் ட்விஸ்ட்

சென்னை: விஜய்யின் லியோ ஷூட்டிங் கடந்த 60 நாட்களாக காஷ்மீரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மே முதல் வாரத்தில் லியோ அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த ஷெட்யூலில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மூவரும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். இந்நிலையில், விக்ரம் பட வில்லனும் லியோவில் விஜய்யுடன் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோவில் இணையும் விக்ரம் பட வில்லன்: தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. … Read more

பெண் குழந்தைகளை காப்போம், கல்வி தருவோம் பிரசாரம்; பாலின விகிதம் மேம்பட உதவியது: பிரதமர் மோடி

புதுடெல்லி, பிரதமர் மோடி பங்கேற்கும் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்கி நிறைவடைந்து உள்ளது. இந்த நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை மக்கள் கேட்பதற்காக நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் அரியானாவை சேர்ந்த் சுனில் ஜக்லான் என்பவரின், மகளுடன் செல்பி என்ற பிரசார திட்டத்திற்காக அவரை பிரதமர் மோடி பாராட்டி … Read more

தோனியால் ரன் அவுட் செய்யப்பட்டது எனக்கு பெருமை.. ராஜஸ்தான் வீரர் நெகிழ்ச்சி.!

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை அணி இரு நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் அணியுடன் விளையாடியது. ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை தனதாக்கியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் துருவ் ஜுரேல் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் தோனி அவரை ரன் அவுட் ஆக்கினார். தோனி தன்னை ரன் அவுட் ஆக்கியது குறித்து துருவ் ஜுரேல் ஒரு … Read more

கைத்துப்பாக்கியுடன் உலா வரும் உக்ரைன் அதிபர்; எதற்காக…? என பேட்டி

கீவ், உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது நீண்டு கொண்டே செல்கிறது. 2 நாட்களுக்கு முன் ரஷியாவின் படையினர் நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலால் 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், உக்ரைனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பின்னர், நடந்த இந்த பெரிய தாக்குதலால் உக்ரைன் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன்னுடன் கைத்துப்பாக்கி ஒன்றையும் வைத்திருக்கிறார். இதுபற்றி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி 1+1 என்ற … Read more