Rajinikanth – ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இப்படியா?.. லோகேஷ் கனகராஜுக்கு கண்டிஷன் போட்டாரா ரஜினி?

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) லோகேஷ் கனகராஜுடன் இணையவிருப்பதாக கூறப்படும் படத்தில் ரஜினிகாந்த் ஒரு கண்டிஷன் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஒரு இயக்குநர் தொடர்ச்சியாக இரண்டு படங்களை கொடுப்பது சாதாரண விஷயமில்லை. ஆனால் லோகேஷ் கனகராஜ் இதுவரை தான் இயக்கிய நான்கு படங்களையும் ஹிட்டாக கொடுத்திருக்கிறார். குறிப்பாக, விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி லோகேஷ் கனகராஜுக்கான டிமாண்டை அதிகரிக்க செய்துள்ளது. அவரது மேக்கிங், திரைக்கதை என அனைத்திலும் புதுமை தென்படுவதால் அவர் இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் … Read more

6 வயது மகளுடன்  போக்குவரத்தை கண்காணிக்கும் காவல் தாய் : கோவையில் சுவாரஸ்ய சம்பவம்

6 வயது மகளுடன்  போக்குவரத்தை கண்காணிக்கும் காவல் தாய் : கோவையில் சுவாரஸ்ய சம்பவம் Source link

இந்திய கடற்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.! நாகையில் பரபரப்பு.!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்திய கடற்படையில் காவலராக பணிபுரிந்து வந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் இன்று அதிகாலை திடீரென தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து துப்பாக்கி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், உயிரிழந்த ராஜேஷின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் ராஜேஷ் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான … Read more

மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து ஆதரவை தெரிவித்தார் பிரியங்கா..!!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளைச் சந்தித்து தனது ஆதரவினைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர்களுடன் உரையாடி தகவல்களைக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா கூறுகையில்,”இந்தப் பெண்கள் நாட்டிற்காக பதக்கங்கள் வாங்கிய போது, அவர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக நாம் அவர்களைக் கொண்டாடினோம். தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி அவர்கள் போராடும் போது, அவர்களின் வலியை கேட்க யாரும் தயாராக இல்லை. … Read more

அதிர்ச்சி..!!தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் 9 பள்ளி மாணவர்கள் தற்கொலை..!

ஆந்திராவில் 10 லட்சத்திற்கும் அதிமான மாணவர்கள் 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை எழுதி இருந்தனர். இந்தநிலையில், அம்மாநிலத் தேர்வு வாரியம் புதன்கிழமை 11, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில், 11-ம் வகுப்பில் 61 சதவீத மாணவர்களும், 12-ம் வகுப்பில் 72 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் இரண்டு நாட்களில் 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்த தகவலின்படி, ஸ்ரீகாகுளம் மாவட்டம், தண்டு கோபாலபுரத்தைச் சேர்ந்த … Read more

550 முறை விந்து தானம் செய்த நபருக்கு நீதிமன்றம் போட்ட தடை..!!

ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் என்ற நபர் ஏறத்தாழ 550 முறை விந்து தானம் செய்தவர்.இந்நிலையில் இவர் ‘இனி விந்து தானம் செய்யக் கூடாது’ என்று நெர்தர்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .இந்த உத்தரவை மீறி மீண்டும் விந்து தானம் செய்ய முயன்றால், அவருக்கு 1,00,000 யுரோஸ் (இந்திய மதிப்பில் ரூ.90,41,657) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு தன்னார்வ அமைப்பும், ஜோனாதன் மூலம் குழந்தை பெற்ற தாய் ஒருவரும் ஹேக் நீதிமன்றத்தில் அவர் மீது தாக்கல் செய்த … Read more

வார ராசி பலன் 30-04-2023 முதல் 06-05-2023 | Vaara Rasi Palan | Astrology | Weekly Astro Predictions

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஓடும் ரயிலில் தண்ணீர் வராததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரயில்வே அதிகாரிகளோடு கடும் வாக்குவாதம்..!

மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் அதிவிரைவு ரயில் மும்பை விடி ஸ்டேஷனில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் கர்நாடகா, ஆந்திரா, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி வழியாக நாகர்கோவில் செல்கிறது. இந்த ரயிலில் நேற்று காலை கழிவறையிலும் வாஷ்பேஷினிலும் தண்ணீர் வராததால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதுகுறித்து ரயில்நிலைய அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அந்த ரயில் … Read more

தமிழகத்தில் முதன்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாடு: முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், முதல்முறையாக மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக `தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாடு’ சென்னைகிண்டியில் உள்ள ஐடிசி ஹோட்டலில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை நேற்று தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார். … Read more

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் சிபிஐ 5 மணி நேரம் விசாரணை

புதுடெல்லி: கடந்த 2019 ஆகஸ்ட் 23 முதல் அதே ஆண்டு அக்டோபர் 30 வரை ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்யபால் மாலிக் பதவி வகித்தார். அப்போது, ஊழியர்கள் சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தத்தை பெறவும் கிரு நீர் மின்சக்தி திட்டத்துக்கான கட்டுமான பணி ஒப்பந்தத்தைப் பெறவும் தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.300 கோடி லஞ்சம் தர முன்வந்ததாக சத்யபால் மாலிக் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக சிபிஐ 2 வழக்குகளை பதிவு செய்து சத்யபால் மாலிக்கிடம் கடந்த ஆண்டு அக்டோபர் … Read more