திருச்சூர் பூரம் விழா : தெற்கு கோபுரம் நடையில் அருள்பாலித்த பகவதி அம்மன்| Thrissur Pooram festival preview Goddess Bhagwati graced the South Gopuram walk

பாலக்காடு, : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற, திருச்சூர் பூரம் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 24ம் தேதி பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில், திருவம்பாடி கிருஷ்ணர் கோவில் மற்றும் இந்த விழாவை கொண்டாடும் உப கோவில்களில் கொடியேற்றம் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி கிருஷ்ணர் கோவில் யானைகளின், ஆடை ஆபரண அலங்காரம், முத்துமணி குடைகளின் கண்காட்சி மற்றும் மாதிரி வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. … Read more

மகன் வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்தால் ஏற்றுக் கொள்வார்களா?: பூமிகா கேள்வி

பாலிவுட் நடிகை பூமிகா சாவ்லா. தமிழில் சில்லுனு ஒரு காதல், பத்ரி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் சல்மான் கான் நடித்து சமீபத்தில் வெளியான 'சசி கா பாய் கசி கா ஜான்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பூமிகா சினிமாவில் ஆணாதிக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லாத … Read more

அதிர்ச்சி.. 34 வயசு தான்.. கிம் கர்தாஷியன் மாதிரி இருந்தாரே.. பிளாஸ்டிக் சர்ஜரியால் பரிதாப பலி

லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச சூப்பர் மாடல் அழகி கிம் கர்தாஷியன் போன்ற முக அமைப்புக் கொண்ட ஒன்லி ஃபேன்ஸ் மாடல் அழகி கிறிஸ்டினா ஆஷ்டன் கோர்கானி (Christina Ashten Gourkani) மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 34. அமெரிக்க மாடல் அழகியான கிறிஸ்டினா ஆஷ்டன் பார்ப்பதற்கு அச்சு அசல் கிம் கர்தாஷியன் போலவே இருப்பார். Only Fans செயலி மூலம் ரசிகர்களுக்கு அந்தரங்க போட்டோக்களை ஷேர் செய்து பிரபலமாகி வந்த கிறிஸ்டினா பிளாஸ்டிக் சர்ஜரி … Read more

தானியங்கி மெஷின் மூலமாக மது விற்பனை வெட்கக் கேடு: இ.பி.எஸ் கடும் கண்டனம்

தானியங்கி மெஷின் மூலமாக மது விற்பனை வெட்கக் கேடு: இ.பி.எஸ் கடும் கண்டனம் Source link

சென்னை | வழக்கு போட்ட இஸ்லாமிய இளைஞரை, வெட்டி படுகொலை செய்த ஆக்கிரமிப்பாளர்கள்!

செங்கல்பட்டு : திருக்கழுக்குன்றம் அருகே காரை வழிமறித்து இஸ்லாமிய இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் மசூதி பகுதியை சேர்ந்தவர் சர்புதீன். 40 வயதாகும் இவர் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இந்நிலையில், சர்புதீன் வசிக்கும் மசூதி தெருவில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். சர்புதீன் வழக்கு தொடர்ந்ததால் ஆக்கிரமிப்பு கடை வைத்திருந்த … Read more

151-வது நாளை எட்டிய திருமண்டங்குடி விவசாயிகள் போராட்டம் – நம்பிக்கை அளித்த அன்பில் மகேஸ்

தஞ்சாவூர்: 151 நாட்களாகத் தொடரும் திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் போராட்டம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் நம்பிக்கையுடன் கூறியிருப்பதாக தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க அகில இந்தியப் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் … Read more

‘விஷப் பாம்பு’ என விமர்சித்த விவகாரம் | வாக்குகள் மூலம் காங்கிரஸுக்கு மக்கள் பதிலடி தருவர்: பிரதமர் மோடி

ஹம்னாபாத் (கர்நாடகா): காங்கிரஸ் தலைவர்களின் கடும் விமர்சனங்களுக்கு வாக்குகள் மூலம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிதார் மாவட்டத்தின் ஹம்னாபாத் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை விவரம்: “நாட்டின் வளர்ச்சிக்காகவும், கர்நாடகத்தின் வளர்ச்சிக்காகவும் பாஜக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருப்பதால் கர்நாடகா வேகமாக வளர்ந்து … Read more

மழை: மதுரைக்கு பெரிய பிரச்சனை.. டேஞ்சர் கொடுக்கும் வானிலை ஆய்வு மையம்.!

கடந்த 100 ஆண்டுகளில் மதுரையின் மழைப் பொழிவு தொடர்ச்சியாக குறைந்து வருவது வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. நெல்லை மாநகர பகுதிகளில் இன்று மீண்டும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது! புவி வெப்பமயமாதல் அதிக கார்பன் உமிழ்வு, உலகமயமாக்கல், பேராசையின் விளைவாக இயற்கை வளங்களை சுரண்டுதல் ஆகிய காரணங்களால் பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது. அதன் காரணமாக பருவநிலை மாற்றம், அதீத மழை பொழிவு அல்லது மழையே இல்லாதது, அதீத வெப்பம், வெள்ளம் போன்ற இயற்கை … Read more

தமிழக அரசிடம் கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் தலையிடாததற்கு தமிழக கடற்றொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 109 மீன்பிடி படகுகள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டியது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் கடற்றொழிலாளர்களுடன் இலங்கை அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டதாக இந்திய கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் அவர்களின் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள … Read more

பழங்குடியின பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடிய ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

ஒடிசாவில் கல்வி நிலைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அங்கு குழந்தைகளுடன் இணைந்து நடனமாடினார். ஒடிசாவில் உள்ள கலிங்கா கல்வி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா முர்முவுடன் பங்கேற்றார். அப்போது பழங்குடியின பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து ஹேமந்த் சோரனும், அவரது மனைவியும் நடனமாடினர். Source link