ஐ.நா. தலைமையகத்தில் மன் கி பாத் ஒலிபரப்பு | UN Mann Ki Baat telecast at HQ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பிரதமரின் மன் கி பாத் 100-வது நிகழ்ச்சி ஐ.நா. தலைமையகத்தில் ஒலிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய நிகழ்வுகள் மாணவர்களுக்கு தேர்வுக்கான ஆலோசனை போன்ற விஷயங்களை பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று அகில இந்திய வானொலி வாயிலாக நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு மன் கி பாத் என பெயரிடப்பட்டுள்ளது; இது 100வது நிகழ்ச்சியாக வரும் நாளை (ஏப்.30) ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாக உள்ளது. இந்நிலையில் … Read more

விளம்பரத்தில் பெங்காலிகள் பற்றி சர்ச்சை : நவாசுதீன் மீது வழக்கு

பாலிவுட் சினிமாவின் முன்னணி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் நவாசுதீன் சித்திக். தமிழில் பேட்ட உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நவாசுதீன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இப்போது புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் நடித்த குளிர்பான விளம்பரம் ஒன்று சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இந்த விளம்பரத்தில் பெங்காலி மக்களை சோம்பேறிகள் என்று சித்தரிக்கும் வகையில் வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இது பெங்காலி மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று திவ்யான் முகர்ஜி என்பவர் … Read more

பாக்.,ல் மருந்துகளின் விலை 20 சதவீதம் உயர்வு | 20 percent increase in the price of medicines in Pakistan

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பொது மருந்துகளின், சில்லறை விலையில், 20 சதவீதமும், அத்தியாவசிய மருந்துகளின், சில்லறை விலையில், 14 சதவீதமும் உயர்த்த, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான், கடும் பொருளாதார நெருக்கடியில், சிக்கி திணறி வருகிறது. மக்கள் அன்றாட வேளையில், இரு வேளை உணவுகள் கிடைக்கவே, போராடி வருகின்றனர். கடந்த மாதம், அந்நாட்டின் பணவீக்க விகிதம், 35 சதவீதத்தை எட்டிய நிலையில், உணவு பணவீக்க விகிதம், 47 சதவீதமாக உயர்ந்ததாக, அந்நாட்டில் இருந்து வெளிவரும், … Read more

Maamannan : வித்தியாசமான போஸ்டருடன் மாமன்னன் பட அப்டேட் கொடுத்த உதயநிதி!

சென்னை : மாமன்னன் படத்தின் அப்டேட்டை புது போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாரின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மாமன்னன் : பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் முதல் படத்திலேயே வெற்றிவாகை சூடினார். பரியேறும் பெருமாள் படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து … Read more

திண்டுக்கல் | திருட்டு மணலில் நகராட்சி கட்டிடப் பணி!

திண்டுக்கல் மாவட்டம் : ஒட்டன்சத்திரம் அருகே திருட்டு மணல் அள்ளி நகராட்சி கட்டிடப் பணிக்கு வீரப்பனை செய்யப்படும் அவலம் அரங்கேறியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம், நவகானி பகுதியில் அமைந்துள்ள குளத்தில் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் தேக்கிவைக்கப்பட்டு, பின்பு பாசன வசதிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குளத்தில் நீர் இல்லாத நேரத்தில் சமூக விரோதிகள் மணல் அள்ளி விற்பனை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி 50க்கும் மேற்பட்ட கனக வாகனங்களை கொண்டு மண் மற்றும் … Read more

மன அழுத்தம்; சென்னை விமான நிலைய 4வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை!

சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் உள்ள திரையரங்கிற்கு குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த பெண், 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (33). இவரின் கணவர் பாலாஜி, அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் 9-ம் வகுப்பும், மகள் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சென்னை விமான நிலையம் இந்தச் சூழலில், நேற்றிரவு தன் … Read more

அரசு கலைக் கல்லூரி கட்டுமானப் பணி: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி அருகே அரசு கலைக் கல்லூரி கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி மாணவர்கள் 2 பேர் இன்று உயிரிழந்தனர். திருச்சுழி அருகே மேலேந்தல் கிராமத்தில் புதிதாக அரசு கலைக் கல்லூரிக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்லூரி கட்டிடப் பணியில் புளியங்குளத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு முடித்து கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த ஹரிஷ்குமார் (15), பிளஸ்-2 முடித்து விடுமுறையில் வீட்டில் இருந்த ரவிசெல்வம் (17) ஆகியோர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. முதல் தளத்தில் … Read more

கர்நாடக தேர்தல் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடக்கும்: நிதிஷ் குமார் தகவல்

பாட்னா: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தற்போது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் அதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, தேர்தல் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதில் ஆலோசிக்கப்படும். ஜெயபிரகாஷ் நாராயண் இயக்கம் பிஹாரில் தொடங்கியதை சுட்டிக்காட்டி, … Read more

தீண்டாமை: ‘முதல்வரே உங்க துறையே இப்படி நடந்துகலாமா’.. கம்யூனிஸ்ட் கடிதம்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலித் மக்கள் மீது இதர சாதியினர் கொலைவெறித்தாக்குதல் நடத்திய நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே காவல்துறை வழக்கு பதிவு செய்ததை கண்டித்து முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். சொன்னதை செய்வாரா முதல்வர்- காத்திருக்கும் மருத்துவர்கள் இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், ‘‘கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், கோட்டையூர் பஞ்சாயத்து, கோட்டையூர் கிராமத்தில் 70 தலித் குடும்பங்களும், 250க்கும் மேற்பட்ட இதர சாதியைச் சேர்ந்த குடும்பங்களும் … Read more