புதிய கேடிஎம் 390 டியூக் பைக்கின் படங்கள் கசிந்தது

அடுத்த தலைமுறை கேடிஎம் 390 டியூக் பைக்கின்  சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் முழுமையாக வெளியாகியுள்ளது. முழுவதும் உற்பத்தி நிலை எட்டியுள்ள 390 டியூக்கில் சக்திவாய்ந்த என்ஜின் கொடுக்கப்பட்டிருக்கலாம். 2023 KTM 390 Duke 2023 கேடிஎம் 390 டியூக் பைக்கின் தோற்றம் விற்பனையில் உள்ள மாடலை விட மிக ஆக்ரோஷமாக தோற்றமளிக்கின்றது. இது “டியூக்” பெயர் மிக பெரிதான எழுத்துகளுடன் பெட்ரோல் டேங்க்  நீட்டிப்புகளில் கொண்டுள்ளது. நிச்சயமாக, ஆரஞ்சு நிறத்தை பெற்ற  ட்ரெல்லிஸ் ஃபிரேம் கொடுக்கப்பட்டுள்ளது. … Read more

2022/2023 பெரும் போகத்தில் அரசாங்க அரிசி கொள்வனவு மற்றும் அரிசி கையிருப்பு அகற்றல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் யாழ்ப்பாணத்தில்

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டத்திற்கு ஏற்ப, குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது – சாகல ரத்நாயக்க. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்காக சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலக … Read more

மதுரையில் கொடூர விபத்து – 10 மாத குழந்தையின் கண்முன்னே பறிபோன தாய் உயிர்.!

மதுரையில் கொடூர விபத்து – 10 மாத குழந்தையின் கண்முன்னே பறிபோன தாய் உயிர்.! மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் முனிக்கோவில் அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி கடந்த இரண்டு  ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பணிகள் குறித்து எந்த விதமான அறிவிப்போ, எச்சரிக்கை பலகையோ வைக்கப்படவில்லை.  இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஹானஸ்ட்ராஜ் என்பவர் தனது நண்பரின் இல்ல விஷேஷத்திற்காக ராஜபாளையம் நோக்கி தனது காரில் குடும்பத்துடன் வந்துள்ளார். … Read more

அம்மன் தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுசீந்திரம் தாணுமாலையர் – அடுத்து தெப்பத்திருவிழா!

சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைமை ஆலயமாக விளங்குகிறது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே லிங்கத்தில் காட்சி அளிக்கும் இந்தத் திருத்தலத்தில் வழிபட்டு இந்திரன் சாபத்தில் இருந்து விடுபட்ட புராணம் உள்ளது. இந்தக் கோயிலில் மார்கழி திருவிழா மற்றும் சித்திரை தெப்பத் திருவிழா ஆகியவை விமர்சையாகக் கொண்டாடப்படும். சித்திரை தெப்பத் திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள், வாகன பவனி, சிறப்பு சமய … Read more

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு குறித்த உச்ச நீதிமன்ற கருத்துக்கு கே.பாலகிருஷ்ணன் பாராட்டு

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, உயர் நீதிமன்றம் தெரிவித்த எந்தக் கருத்துகளையும் பிரதான வழக்கு விசாரணையின்போது விசாரணை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளது பாராட்டுக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் உள்ளிட்ட ஐந்து … Read more

டெல்லி பல்கலை. நூற்றாண்டு விழா: திருவள்ளுவர் படத்துடன் கூடிய நாட்காட்டி வெளியீடு

புதுடெல்லி: டெல்லி பல்கலைகழக நூற்றாண்டை ஒட்டி வெளியிடப்பட்ட நாட்காட்டியில் திருவள்ளுவர் பற்றியும் ஒருபக்கம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், திருக்குறள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. உலகின் பெருமைமிகு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக டெல்லிப் பல்கலைக்கழகம் விளங்குகிறது. மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதில், பட்டம் பயின்ற மாணவர்கள் பன்முகத்திறன் கொண்டவர்களாக உருவாகியுள்ளனர். இத்தகைய சிறப்புமிக்க டெல்லிப் பல்கலைகழகம் தனது கல்விப் பணியில் ஒரு நூற்றாண்டை நிறைவு செய்துள்ளது. இச்சிறப்பை பறைசாற்றி மகிழ பல்கலைக்கழகத்தின் சார்பில் பஞ்சாங்க நாட்காட்டி ஒன்று வெளியாகி … Read more

பூமியின் சுற்றுவட்ட பாதையில் ஹப்பிள் தொலைநோக்கியின் 33 ஆண்டுகள்! – நாசா வெளியிட்ட புதிய புகைப்படம்

நியூயார்க்: ஹப்பிள் தொலைநோக்கி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டு 33 வருடங்கள் கொண்டாடும் வகையில் புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது. ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி 1990-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் தொலைநோக்கி இதுவாகும். ஹப்பிள் தொலைநோக்கி ஒரு பேருந்து அளவுள்ளது. 97 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியை ஹப்பிள் சுற்றி வருகிறது. (இந்த வேகத்தில் சென்றால் சுமார் ஒன்றரை நிமிடத்தில் சென்னையிலிருந்து திருச்சி சென்றுவிடலாம்). அகச்சிவப்பு கதிர், புறஊதா கதிர், காணுறு ஒளி … Read more

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு; உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு.. கே.பாலகிருஷ்ணன் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் உயர்நீதிமன்றம் தெரிவித்த எந்த கருத்துகளையும் பிரதான வழக்கு விசாரணையின்போது விசாரணை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு கடந்த 29.8.2022 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவருமே நிரபராதிகள் எனவும், … Read more

ராகுல் காந்தி அவதூறு வழக்கு.. உயர்நீதிமன்றத்தில் காரசாரம்.. என்ன தீர்ப்பு வரப்போகுதோ.?

வழக்கு முடியும் வரை சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துடிப்பான தலைவராக ராகுல் காந்தி உள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் நடத்திய இந்திய ஒற்றுமை பேரணிக்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்தனர். ஒன்றிய பாஜக அரசையும், அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஐயும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல் தொழிலதிபர் அதானிக்கு நாட்டின் வளங்கள் கொடுக்கப்பட்டது பற்றியும், … Read more