அமெரிக்காவில் ராணுவ பயிற்சியின்போது ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல் – 3 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஹீலி என்ற இடத்தில் ராணுவத்தினர் நேற்று முன்தினம் வழக்கமான ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ராணுவத்துக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டது. நடுவானில் பறந்தபோது திடீரென அந்த 2 ஹெலிகாப்டர்களும் நேருக்கு நேர் மோதின. இதில் ஹெலிகாப்டர்கள் கீழே விழுந்து அப்பளம்போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மற்றொரு வீரர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். … Read more

கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட பயிற்சி பட்டறை வெற்றிகரமாக நிறைவு பெற்றது

இலங்கை கடற்படையின் திறன்களை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுமைக்கான நிறுவகத்தின் (Institute for Security Governance – ISG) வளங்களைக் கொண்டு கடற்படைத் தலைமையகத்தில் 2023 ஏப்ரல் 25 ஆம் திகதி முதல் மூன்று (03) நாட்களாக நடைபெற்ற பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக 2023 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி நிறைவு பெற்றது. இதன்படி, கடற்படையில் மனித வள முகாமைத்துவத்தை அதிகரிப்பதற்கும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த கடல்சார் புலனாய்வுத் திறன்களை மேம்படுத்துவதற்கும், அது தொடர்பான … Read more

பிணங்களை வன்புணர்வு செய்யும் நெக்ரொபிலியாக்கள்… கல்லறைக்கு பூட்டு போடும் அவலம்!

Raise in Necrophilia Cases in Pakistan: பிணத்துடன் உறவுக்கொள்ளும் நெக்ரோபிலியா மன நிலை கொண்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை பாகிஸ்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

கொழுந்தனுடன் கள்ளக்காதல்… மனைவியின் கழுத்தை வெட்டிய கணவர்..! திருச்சியில் பரபரப்பு..!

திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கணவர் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் கோட்டை அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு அமர்நாத் (28), ரகுநாத் (25) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் அமர்நாத்துக்கு திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கொழுந்தன் ரகுநாதத்துடன் மாரியம்மாளுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அமர்நாத், மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும், அதனைக் கண்டு கொள்ளாமல் மாரியம்மாள் இருந்ததால் ஆத்திரமடைந்த அமர்நாத், … Read more

மக்கள் நீதி மய்யம் யாருடைய பி டீம் என்றால்…

மக்களவைத் தேர்தல், கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கோவையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது கமல்ஹாசன் பேசுகையில், ‛2024ஐ நோக்கி நகர்ந்து வருகிறோம். அது மட்டும் தானா என்றால் இல்லை, 2026 அதைவிட முக்கியம். மக்களை மையம் கொள்வதே மய்யத்தின் வேலை. மக்கள் நீதி மய்யம் யாருடைய பி டீம் என்றால், மக்களின் பி டீம். தேர்தல் கூட்டணி பற்றி பேச இன்னும் நேரம் உள்ளது. ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்துள்ளது. … Read more

IPL 2023 Daily Round Up: ரோஹித்தின் 10 வருட கொண்டாட்டம் முதல் வங்கதேசம் கிளம்பிய லிட்டன் தாஸ் வரை!

நாடு திரும்பிய லிட்டன் தாஸ்: வங்கதேச அணி வீரரான லிட்டன் தாஸ், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று தனது சொந்த நாடான வங்கதேசத்திற்குச் சென்றுள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. “லிட்டன் தாஸ் குடும்பத்தில் ஏற்பட்ட அவசர மருத்துவச் சூழல் காரணமாக நாட்டிற்குத் திரும்பியுள்ளார். இந்தக் கடினமான நேரத்தைக் கடக்க அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துகள்” என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் இந்த ஐபிஎல் … Read more

எழும்பூர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிமன்றங்கள் திறப்பு: அமைச்சர், ஐகோர்ட் நீதிபதிகள் பங்கேற்பு 

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிமன்றங்களை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா சனிக்கிழமை (ஏப்.29) திறந்து வைத்தார். சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காசோலை மோசடி வழக்குகளுக்கான இரண்டு கூடுதல் நீதிமன்றங்கள், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை வழக்குகளுக்கான ஒரு கூடுதல் நீதிமன்றம், சிறிய வழக்குகளுக்காக மெய்நிகர் முறையிலான ஒரு நடமாடும் நீதிமன்றம், ரயில்வே சட்ட வழக்குகளுக்கான ஒரு நடமாடும் நீதிமன்றம் என 5 … Read more

“அத்தீக் அகமதுவை போல என்னை யாரேனும் சுட விரும்புகிறீர்களா?” – பொதுக் கூட்டத்தில் கேட்ட ஆசம் கான்

ராம்பூர் (உத்தரப் பிரதேசம்): சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பி அத்தீக் அகமது சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தன்னை யாரேனும் சுட்டுக்கொல்ல விரும்புகிறீர்களா என அக்கட்சியின் மூத்த தலைவரான ஆசம் கான் பொதுக்கூட்டம் ஒன்றில் கேள்வி எழுப்பினார். சமாஜ்வாதி காட்சியின் மூத்த தலைவரான ஆசம் கான், உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ராம்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “அத்தீக் அகமது சுட்டுக் கொல்லப்பட்டது போல, நானும் எனது குடும்பமும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என யாரேனும் விரும்புகிறீர்களா? என்னிடம் இருந்தும் எனது … Read more

நெதர்லாந்தில் 550 முறை விந்து தானம் செய்த ‘தாராள பிரபு’வுக்கு நீதிமன்றம் தடை

ஹேக் (நெதர்லாந்து): ஏறத்தாழ 550 முறை விந்து தானம் செய்த நபருக்கு, ‘இனி விந்து தானம் செய்யக் கூடாது’ என்று நெர்தர்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் என்ற அந்த நபர், இந்த உத்தரவை மீறி மீண்டும் விந்து தானம் செய்ய முயன்றால், அவருக்கு 1,00,000 யுரோஸ் (இந்திய மதிப்பில் ரூ.90,41,657) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் செய்தி, ஒரு தன்னார்வ அமைப்பும், ஜோனாதன் மூலம் குழந்தை பெற்ற தாய் … Read more

'பி.டி.உஷா பேச்சு வெட்கக்கேடு'.. பாலியல் தொல்லை.. பாஜக எம்பி-க்கு ஆதரவு – சீமான் விளாசல்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பு தலைவருமான பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது நடவடிக்கைக்கோரி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரிஜ்பூஷன் ஷரண்சிங் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த பிரிஜ் பூஷன் ஷரண் சிங் ” நான் நிரபராதி எனது பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை. விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். நீதித்துறையின் மீது … Read more