அன்றைக்கு அம்பேத்கர்.. இன்றைக்கு நான்.. என்னை இப்படி விமர்சிக்கிறார்களே.. மோடி ஆவேசம்
பெங்களூர்: அன்றைக்கு சட்ட மேதை அம்பேத்கரை அவமானப்படுத்தியவர்கள், இன்றைக்கு என்னையும் அவமானப்படுத்துகிறார்கள் என காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன் மீது மோசமான விமர்சனத்தை முன்வைத்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் வரும் மே மாதம் 10-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால் அங்கு அரசியல் கட்சிகள் உச்சக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மோடி … Read more