Jio Data Plans: வெயில் காலத்தில் வீட்டில் இருந்தே திரைப்படங்களை பார்க்க சிறந்த 2.5GB டேட்டா திட்டங்கள்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் 2.5GB திட்டங்களை அதிக அளவு வழங்கும் டெலிகாம் நிறுவனம் ஆகும். இந்த திட்டங்கள் அனைவருக்கும் ஏற்ற திடமாக இருக்காது. காரணம் ஒரு நாளைக்கு அதிகப்படியான டேட்டா தேவைப்படும் நபர்கள் மட்டுமே இந்த திட்டங்களை பயன்படுத்துவார்கள். அதில் Jio பொறுத்தவரை நான்கு 2.5GB டேட்டா திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. தற்போது வெயில் காலம் என்பதால் வீட்டில் இருந்தே OTT மூலம் திரைப்படங்களை பார்க்க … Read more

Mann Ki Baat: மனதின் குரல் 100வது நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடி ஒலிபரப்பு!

பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையின் 100வது பகுதி இந்திய நேரப்படி  ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் நிலையில், இந்நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.  

மீனாட்சி பொண்ணுங்க: குடிபோதையில் மயங்கிய வெற்றி.. ஷக்திக்கு ஷாக் கொடுத்த ரங்கநாயகி..!

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் வெற்றி குடிபோதையில் திருமணத்தில் நடனமாடி மயங்க, திருமண மண்டபத்தில் திடீரென சக்தி என்ட்ரி கொடுப்பதால் பரபரப்பாகிறது.   

’மதிமுகவை திமுகவுடன் இணைந்துவிடுங்கள்’ வைகோவுக்கு வந்த கடிதம்: துரை வைகோ விளக்கம்

கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த கட்சியினர் இனியும் ஏமாறாமல் இருக்க மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுமாறு மதிமுக அவைத்தலைவர் வைகோவுக்கு எழுதியிருக்கும் கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் 26 பேர் உயிரிழப்பு

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்தனர். கடந்த 2 மாதங்களில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் ஆகும். தற்போது பக்முத் நகரை தொடர்ந்து உமன் நகரில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன. ரஷ்ய ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் இங்கு குழந்தைகள் உள்ளிட்ட 26 பேர் பலியாகி உள்ளனர். தாக்குதலில் இடிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பக்முத் நகரை போலவே … Read more

550 குழந்தைகளுக்குத் தந்தையான நபர்: 88,000 பவுண்டுகள் அபராதம் என எச்சரிக்கை

உயிரணு தானம் செய்யும் ஒருவர், விதிகளை மீறி 550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளது தெரியவந்துள்ளது. தானம் செய்யத் தடை நெதர்லாந்து நாட்டவரான ஜோனதன் (Jonathan Meijer, 41) உயிரணு தானம் செய்வபர். ஆனால், ஒருவர் அதிகபட்சம் 12 தாய்மார்களுக்கு உயிரணு தானம் செய்யலாம். 25 பிள்ளைகளுக்கு மட்டுமே தந்தையாகலாம் என விதி உள்ளது. ஜோனதனோ, இதுவரை 550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளதாக கருதப்படுகிறது. ஆகவே, இனி உயிரணு தானம் செய்ய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி உயிரணு தானம் … Read more

பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அஜித் நடித்த வாலி, முகவரி, ரெட், சிட்டிசன் உள்ளிட்ட 9 படங்களை தயாரித்துள்ளார் சக்கரவர்த்தி. திரையுலகில் அஜித் ரீ-என்ட்ரி கொடுத்த வரலாறு உள்ளிட்ட மொத்தம் 15 படங்களை இவர் தயாரித்துள்ளார். கடைசியாக சிம்பு நடித்த வாலு திரைப்படத்தை தயாரித்த இவர் சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரிசில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். Rip ..nic arts chakravarthi sir…🙏 Prayers..புற்றுநோயால் … Read more

ஆர்.எஸ்.பாரதி ரூ.500 கோடியே 1 ரூபாய் இழப்பீடு தரவேண்டும்.. “மன்னிப்பு கேளுங்க”.. அண்ணாமலை நோட்டீஸ்!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்கவேண்டும் எனக் கோரி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆருத்ரா விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பிய ஆர்.எஸ்.பாரதி 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். திமுகவினரின் சொத்து பட்டியல் என அவதூறு பரப்பியதாக அண்ணாமலைக்கு திமுகவினர் அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஆருத்ரா விவகாரத்தில் அண்ணாமலை ரூ.84 … Read more

காண்போரை கவர்ந்த மாம்பழ மகோற்சவம்| Mango Makotsavam attracted the spectators

மாம்பழங்களின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவும், சந்தைப்படுத்தவும், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு எருத்தேன்பதியில், மாம்பழ மகோற்சவம் நடக்கிறது. மகளிர் விவசாயிக்கான அரசு விருது பெற்ற, பிளசி ஜார்ஜின் தலைமையில் ஒயிஸ்கா இன்டர்நேஷனல் தொண்டு நிறுவனத்தில் ஒத்துழைப்புடன், மாம்பழ மகோற்சவம் நடக்கிறது. இதில் பங்கேற்றவர்கள், பல மாம்பழ ரகங்களை கண்டும், ருசித்தும் மகிழ்ந்தனர். பலவகை மாம்பழங்கள் குறித்தும், பயிற்சி வகுப்பு குறித்தும், அறுசுவை குறித்தும், மகோற்சவ அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். மா மற்றும் பழ நாற்றுகள், கலப்பினங்கள் … Read more

குக்வித் கோமாளியில் இணைந்த முக்கிய பிரபலங்கள்

விஜய் டிவியில் வார இறுதி சனி, ஞாயிறு தினங்களில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. மூன்று சீசன்களை கடந்து தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இரு வாரத்திற்கு ஒரு முறை எலிமினேஷன் நடைபெறும். அந்த வகையில் கடந்த வாரத்தில் கூட நடிகை ஷெரின் வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரத்தில் வைல்ட் கார்டு சுற்று நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே வெளியேறிய குக்குகள் மற்றும் புதிதாக ஒரு சிலரும் இணைவார்கள். அதன்படி, இந்த … Read more