Dhanush: தனுஷுக்காக ரெடியான கதையில் கவின்… இயக்குநர் இளனின் அதிரடி முடிவு… ஏன் இந்த மாற்றம்?

சென்னை: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் உட்பட மேலும் சில ப்ராஜக்ட்களிலும் கமிட் ஆகியுள்ளார். அதேபோல் பியார் பிரேமா காதல் பட பிரபலம் இளன் இயக்கத்தில் ஒருபடம் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அந்தப் படத்தில் தனுஷுக்குப் பதிலாக கவின் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷுக்குப் பதிலாக கவின்: கடந்தாண்டு ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என ரவுண்டு கட்டிய தனுஷ், இந்தாண்டு … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் 29ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு, 2023 ஏப்ரல் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான … Read more

6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் – 16 வயது சிறுவன் போக்சோவில் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 16 வயது சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர் தனது வீட்டின் அருகே பெற்றோருடன் வசித்து வரும் 6 வயதுடைய சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இதையறிந்த சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குன்னம் போலீசார் … Read more

#BREAKING: வனிதாவின் 4-வது கணவர் பீட்டர் பால் திடீர் மரணம்..!!

நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா, 1995-ம் ஆண்டு வெளியான ‘சந்திரலேகா’ படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடித்த படங்கள் பெரியளவில் வெற்றி அடையாமல் போனது. இதையடுத்து 2000-ம் ஆண்டு தனது 19-வது வயதில் டி.வி. நடிகர் ஆகாஷை திருமணம் செய்துகொண்டார்.இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த 2006-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக ஆகாஷை பிரிந்த வனிதா, 2007-ம் ஆண்டு ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் … Read more

இந்தாண்டு 216 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக இருக்கும்..!! எத்தனை நாள் விடுமுறை தெரியுமா ?

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.6-12ம் வகுப்புக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்புக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023-24ம் கல்வி ஆண்டில் 216 நாட்கள் பள்ளி வேலைநாட்களாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காலாண்டு விடுமுறை, அரையாண்டு விடுமுறை, கோடை விடுமுறை, பொதுவிடுமுறை என மொத்தம் 150 நாட்கள் விடுப்பு நாட்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் … Read more

`சந்தர்ப்பவாதம்; குடும்ப மறுமலர்ச்சி’ – வைகோவுக்கு மதிமுக அவைத்தலைவர் எழுதிய கடிதத்தில் உள்ளது என்ன?

மதிமுக-வை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருக்கிறார். அதில் பல்வேறு அதிருப்திகரமான விமர்சனங்ளை முன்வைத்திருக்கிறார். குறிப்பாக மதிமுகவை, திமுகவுடன் இணைத்து விடுங்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “ மதிமுக துவக்கப்பட்ட காலத்தில், தங்களின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டே, லட்சக்கணக்கான தோழர்கள், தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர். ஆனால் தங்களின் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக, தங்களை ஆதரித்த பெருவாரியான … Read more

”சூடானில் இன்னும் 200 தமிழர்கள் சிக்கி உள்ளனர்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

சென்னை: சூடானில் இன்னும் 200 தமிழர்கள் சிக்கி உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். சூடான் நாட்டில் தற்போது ராணுவம் மற்றும் உள்நாட்டு படையினருக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கிருந்து மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள், அங்குள்ள இந்தியத் தூதரகம் மூலம் கண்டறியப்பட்டு, ‘ஆபரேஷன் காவிரி’ என்ற திட்டத்தின் கீழ், இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சூடானில் இருந்து … Read more

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பிரியங்கா காந்தி: பிரிஜ் பூஷனை அரசு பாதுகாப்பதாக குற்றச்சாட்டு 

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீராங்கனைகளை பிரிங்கா காந்தி வத்ரா இன்று (சனிக்கிழமை) சந்தித்து ஆதரவு தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளைச் சந்தித்து தனது ஆதரவினைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர்களுடன் உரையாடி தகவல்களைக் … Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: இறுதிகட்டத்தை நெருங்கியது – அமைச்சர் ஆய்வு!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் இட நெருக்கடி, போக்குவரத்து நெருக்கடியை போக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகள் குறித்து சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திருக்கோவில்களில் பக்தர்களின் வசதிக்காக புதிய ஏற்பாடு – சேகர்பாபு துவக்கி வைத்தார் அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் … Read more