மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி.!

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி.! தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. கட்சியின் தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி உயிரிழந்தார். அவரின் நினைவாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.  இதற்கிடையே தமிழக அரசு, நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னமும் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்பட … Read more

கஜினி பட நடிகை தற்கொலை வழக்கு – காதலன் விடுதலை!!

பிரபல பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கில் இருந்து நடிகரும், அவரது காதலருமான சூரஜ் பஞ்சோலி விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு நடிகை ஜியா கான் மும்பை ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு முன்பு எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்நிலையில், தனது மகள் கொல்லப்பட்டுள்ளதாக, ஜியா கானின் தாயார் குற்றம் சாட்டினார். இதனையடுத்து ஜியா கானின் காதலர் சூரஜ் பஞ்சோலி கைது … Read more

கொடூர வீடியோ! வகுப்பறையில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை!!

வகுப்பறையில் பட்டப்பகலில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோவை சமூக செயற்பாட்டாளரான அருணேஷ் குமார் யாதவ் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அரசு ஐடிஐயில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்து, அருணேஷ் குமார் யாதவ் காவல்துறைக்கு டேக் செய்துள்ளார். போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என … Read more

இன்று 216 பேருக்கு கலைமாமணி விருது வழங்கும் புதுவை அரசு..!!

புதுச்சேரி மாநிலத்தில் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம்- சிற்பம் மற்றும் நாட்டுப்புறக்கலை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளும், தமிழுக்கு சிறந்த தொண்டு புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்மாமணி விருதுகளும் புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக வழங்கப்பட்டு வந்தது. முன்பு கலைமாமணி விருதுக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 சவரன் தங்க பதக்கம் தரப்படும். தமிழ்மாமணி விருதுக்கு ரூ. 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 சவரன் … Read more

இரண்டு ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை!!

பாகிஸ்தானில் ஒரு குழந்தை இரண்டு ஆணுறுப்புகளுடன் பிறந்துள்ளதால் மருத்துவர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். டிஃபாலியா எனப்படும் அரிய மருத்துவ நிலை காரணமாக குழந்தை இரண்டு ஆணுறுப்புறுப்புகளுடன் பிறந்திருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் குழந்தைக்கு மலம் கழிக்க ஆசனவாய் இல்லை. மருத்துவ அறிவியல் வரலாற்றில் டிஃபாலியா தொடர்பாக இதுவரை 100 கேஸ்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. முதன் முதலில் 1609 ஆம் ஆண்டு இப்படியான ஒரு குழந்தை பிறந்ததாக பிரபல மருத்துவ பத்திரிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பிறந்துள்ள குழந்தைக்கு ஒரு … Read more

காஷ்மீரில் ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்… மோடி அமைதி காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகும், பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 மத்திய பா.ஜ.க அரசால் நீக்கப்பட்டது. அதன் பிறகு, அங்கு பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறைந்துவிட்டதாக மத்திய அரசு கூறிவருகிறது. ஜம்மு-காஷ்மீர் “பிரிவு 370 நீக்கப்பட்ட நடவடிக்கை, அந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதிகளுக்கு மிகப்பெரிய அடியாகும்” என்று மத்திய உள்துறை அமித் ஷா கூறுகிறார். … Read more

ரியல் எஸ்டேட் தொழிலில் மோதல்… நண்பர்கள் எதிரியானதால் அரங்கேறிய கொடூரக் கொலை…! விசிக பிரமுகர் கொலை வழக்கில் திருப்பம்

சென்னை கே.கே நகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வி.சி.க பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட மோதலால் கொடூரக் கொலை அரங்கேறியது தெரியவந்துள்ளது. சென்னை கே.கே நகர் அம்பேத்கர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வி.சி.க பிரமுகர் தமிழ் முதல்வன் (எ) மண்டகுட்டி ரமேஷ். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த ஏ கேட்டகிரி ரவுடியான ரமேஷ் மீது கோடம்பாக்கம், எம்.கே.பி நகர், எம்.ஜி.ஆர் நகர், கே.கே … Read more

தமிழகத்தில் 100 பயிற்சி இடங்களுடன் 11 புதிய செவிலியர் பயிற்சி கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 11 புதிய செவிலியர் பயிற்சி கல்லூரிகளைத் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மாநில அளவிலான அனைத்துதுணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், பயிற்சிப் பள்ளி முதல்வர்கள், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள், மாநகராட்சி நல அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிவில் செய்தியாளர் களிடம் அமைச்சர் கூறியதாவது: … Read more

சத்தீஸ்கரில் 10 போலீஸார் உயிரிழந்த சம்பவத்தில் சாலையில் சுரங்கம் தோண்டி கண்ணிவெடி தாக்குதல் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியீடு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 10 போலீஸார் உயிரிழந்த சம்பவத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தியவிதம் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட ஆயுதபோலீஸ் படை (டிஆர்ஜி) உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தப் படையில் உள்ளூர் இளைஞர்கள், மனம் திருந்திய மாவோயிஸ்ட்கள் மற்றும் போலீஸார் இடம்பெற்றுள்ளனர். டிஆர்ஜி படையில் முன்னாள் மாவோயிஸ்ட்கள் இருப்பதால் தீவிரவாதிகளின் … Read more

கமல்ஹாசனை அழைத்த ராகுல் காந்தி: கர்நாடகாவில் களைகட்டும் பிரச்சாரம்!

கர்நாடகத் தேர்தலுக்கு கமல்ஹாசனிடம் ராகுல் காந்தி ஆதரவு கேட்டுள்ள நிலையில் கர்நாடகா சென்று பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் – ராகுல் காந்தியின் சுவாரசிய உரையாடல். நேற்று (ஏப்ரல் 28) மதியம் கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் கோவை, சேலம் மண்டல நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மாநில நிர்வாகிகள் பலர் கருந்துரையாற்ற … Read more