தடை செய்யப்பட்ட நடிகர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் : கேரள அமைச்சர் கருத்து

மலையாள திரையுலகில் நல்ல நடிப்பு திறமை கொண்ட, வளர்ந்து வரும் இளம் நடிகர்களான ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாஷி இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் படப்பிடிப்பின்போது பல்வேறு விதமான தொந்தரவுகளை தருவதாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு புகார் வந்தது. குறிப்பாக படப்பிடிப்பின்போது போதை வஸ்துகளை பயன்படுத்திக் கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும் சில நேரங்களில் தரக்குறைவான வார்த்தைகளை பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இந்த புகார்களை விசாரித்த தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் ஆகியவை நடிகர் … Read more

Venkat prabhu:எலும்பும் தோலுமாக மாறிய வெங்கட் பிரபு.. அவரது புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபு திரையுலகில் தனது 16 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஹீரோவாக தமிழில் அறிமுகமான இவர், தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாகவும் கேரக்டர் ரோல்களில் நடித்துள்ளார். தற்போது நாக சைத்தன்யாவை லீட் கேரக்டரில் வைத்து கஸ்டடி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எலும்பும் தோலுமாக மாறிய வெங்கட் பிரபு : இயக்குநர் வெங்கட் பிரபு திரைலகில் தன்னுடைய … Read more

படம் பார்க்க வந்தவர்களுக்கு காலை உணவு.. கார்த்தி ரசிகர்கள் அசத்தல்!

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபாலா, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா, நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சோழ – பாண்டிய மன்னர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு … Read more

விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10, +2 வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள்..!!

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி முடிந்தன. அதேபோல 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. இந்த நிலையில் அவர்களுக்குத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 21 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதிய நிலையில், 12ஆம் வகுப்புத் தேர்வை 16 லட்சத்துக்கும் மாணவர்கள் எழுதி … Read more

ஆர்.கே.சுரேஷூக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்!!

ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக வட்டி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்து பொதுமக்களிடம் பல கோடி மோசடி செய்ததாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ஆருத்ரா நிதி நிறுவனம் 98,000 பேரிடம் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளிடம் தொடர்ந்து … Read more

ஒன் பை டூ

கல்யாண சுந்தரம், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க “முற்றிலும் உண்மை. தி.மு.க என்ற ஊழல் கட்சி வீட்டுக்கு மட்டும் போகாது. அவர்களின் மொத்த சாம்ராஜ்ஜியமும் தரைமட்டமாக அழிந்துபோகும். தி.மு.க-மீது ஊழல் குற்றச்சாட்டு எழுவது இது ஒன்றும் முதன்முறை அல்ல. ஆனால், இம்முறை அந்த கட்சியைச் சேர்ந்தவரும், இந்த மாநிலத்தின் முக்கிய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவரே ஒரு மாபெரும் ஊழல் குற்றச்சாட்டைச் சொல்வதான ஓர் ஆடியோ வெளியாகியிருக்கிறது. அதில், `30,000 கோடி ரூபாயை ஊழல்செய்து, மாநில முதல்வரின் மகனும் … Read more

ஊதுவேன் ஆனா ஊதமாட்டேன்… புட்டிப்பால் குழந்தை போல போலீசாரிடம் போதையன் வம்பு..!

போதையில் தாறுமாறாக கார் ஓட்டி வந்து இரு சக்கர வாகனத்தின்  மீது மோதி விபத்தை ஏற்படுத்திய எல்.ஐ.சி ஏஜெண்டு ஒருவர் போலீசாருக்கு ஒத்துழைக்க மறுத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் மதுரையில் அரங்கேறி உள்ளது மதுரை மேல மாசி வீதியைச் சேர்ந்த எல்ஐசி ஏஜெண்டு பிரித்திவிராஜ் . இவர் வியாழக்கிழமை நள்ளிரவு அளவுகதிகமான மது போதையில் காரை ஓட்டி வந்து இருசக்கர வாகனத்தில் மோதியதால் பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை … Read more

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப். 29-ம் தேதி (இன்று) … Read more

பைக்கில் 3 பேர் பயணிக்கும் வகையில் குழந்தையுடன் செல்லும் பெற்றோருக்கு அனுமதி: மத்திய அரசை அணுக கேரளா திட்டம்

கேரளாவின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் செயற்கை நுண் ணறிவு அடிப்படையிலான தானியங்கி போக்குவரத்து நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு இருசக்கர வாகனங்களில் 3 பேர் செல்லும் ‘ட்ரிபிள் ரைடிங்’ குற்றத்துக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இருசக்கர வாகனங்களில் குழந்தையுடன் பெற்றோர் செல்ல அனுமதிக்கும் வகையில் ‘ட்ரிபிள் ரைடிங்’ தடையிலிருந்து அவர்களுக்கு விதிவிலக்கு கோரி மத்திய அரசை அணுகுவது குறித்து கேரள போக்குவரத்து துறை பரிசீலித்து வருகிறது. … Read more

கிழக்கு லடாக் எல்லையில் படைகளை திரும்ப பெறாதவரை இந்தியா – சீனா இடையே சுமுக உறவு ஏற்படாது: சீன அமைச்சரிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

புதுடெல்லி: இந்தியா-சீனா எல்லையில் சீனா ராணுவம் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் அத்துமீறியது முதல், இரு நாடுகளும், கிழக்கு லடாக் எல்லையில் சுமார் 50,000 ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளன. இரு தரப்பும் போருக்கு தயார் நிலையில் இருக்கும் சூழ்நிலை அங்கு நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்ஃபு டெல்லி வந்துள்ளார். அவரை பாதுகாப்புத் துறை அமைச்சர் … Read more