தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தனியார் பேருந்து சாலையோரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். ஆரப்பாளையத்தில் இருந்து போடி நோக்கி சென்ற தனியார் பேருந்து, திருமங்கலம் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் மேலதிருமாணிக்கத்தை சேர்ந்த குருசாமி, டி.ராமநாதபுரத்தை … Read more

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரத்தில், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 7 அரசு ஆயுஷ் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் செங்கல்பட்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதில் சென்னை யோகா மற்றும் இயற்கை மருத்துவக் … Read more

ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: எஸ்சிஓ மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு

புதுடெல்லி: ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், அதன் பாதுகாப்பு மாநாடு புதுடெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எஸ்சிஓ அமைப்பின் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகள் பார்வையாளர் நாடுகளாக உள்ளன. இன்று … Read more

அண்ணாமலை: தமிழ்த்தாய் வாழ்த்து.. ‘மெட்டு சரியில்லை’.. ‘இது புதுசா இருக்குணே புதுசா இருக்கு’.!

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கர்நாடகா தேர்தல் கர்நாடகாவில் மே 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு மே 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலில் ஆம் ஆத்மி கட்சியும் முதல் முறையாக போட்டியிடுகிறது. இந்த சூழலில் கர்நாடகா மாநிலத்தின் தேர்தல் … Read more

Ponniyin selvan 2: விக்ரமின் குடுமியை பிடித்து இழுத்த ஐஸ்வர்யா லட்சுமி: தலையில் சட்டுனு அடித்த சோபிதா

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் Ponniyin Selvan 2 video: பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா லட்சுமி செய்த குறும்பு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது. ​பொன்னியின் செல்வன் 2​Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 படத்தை ஒத்த வார்த்தையில் விமர்சித்த ரசிகர்கள்: என்ன வார்த்தை தெரியுமா?மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் … Read more

சூடானில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள் – வெள்ளை மாளிகை அறிவிப்பு

சூடான் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வரவில்லை என்பதால் அங்கு வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரினே ஜீன் பெரைரா வேண்டுகோள் விடுத்துள்ளார். சூடானின் தற்போதை நிலை மிகவும் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், சூடானில் சண்டையிட்டு வரும் இரு ராணுவ குழுவினரும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.  Source link

மாமியார் உடனான தகராறில் 5 மாத கர்ப்பிணி கடலில் குதித்து தற்கொலை..!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே, மாமியார் உடனான தகராறில் 5 மாத கர்ப்பிணி கடலில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சாப்ட்வேர் என்ஜினியரான மணிகண்டனுக்கும், சுவேதாவுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மணிகண்டன் பணி நிமித்தமாக ஹைதராபாத் சென்றிருந்த நிலையில், சம்பவத்தன்று சுவேதாவுக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறில் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு சென்று சுவேதா கடலில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 5 மாத கர்ப்பிணியான சுவேதாவின் … Read more

தோனி அவரை ரிமோட் கண்ட்ரோல் போல் பயன்படுத்துகிறார்:இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து

தோனி நினைப்பதை மதீஷா பதிரானா செய்வதால், அவரை ரிமோட் கண்ட்ரோல் போல் தோனி பயன்படுத்துகிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார். முரளி கார்த்திக் கருத்து ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இரண்டாவது முறையாக சென்னை அணி தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் … Read more

மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அரசு தரப்பு உறுதி| The case against the head of the wrestling federation was confirmed by the government in the Supreme Court

புதுடில்லி,பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ., – எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும் என, உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் நேற்று உறுதி அளிக்கப்பட்டது. சர்வதேச மல்யுத்த போட்டிகளில் நம் நாட்டின் சார்பாக போட்டியிட்டு பதக்கங்களை வென்ற ஏழு பெண் மல்யுத்த வீராங்கனைகள், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ., – எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து, … Read more

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ஜோதிகா : வைரலாகும் வீடியோ

36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை ஜோதிகா, தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக நடித்து வருகிறார். கடைசியாக சசிகுமார் உடன் உடன்பிறப்பே படத்தில் அவரது தங்கையாக நடித்தார். அடுத்தப்படியாக சில படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜோதிகா இன்று தனது ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தலைகீழாக நின்றபடி நடிகை … Read more