டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11.30 மணி அளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வருமாறு குடியரசு தலைவருக்கு அழைப்பிதழை வழங்கினார். முன்னதாக இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி சென்ற தமிழக முதல்வருக்கு திமுக மூத்த தலைவர்கள் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள … Read more

சினிமாவாகிறது கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல்

கடந்த 2020ம் ஆண்டு, இந்தியா, சீனா எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு வழியாக சுமார் 200 சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அருகில் உள்ள கிராமங்களை ஆக்கிரமிக்க முயற்சித்தனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் எதிர்த்து போராடினார்கள். இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 45க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் இறந்தனர். ஆயுதங்கள் எதுவும் இன்றி வெறும் கைகலப்பு, கல்வீசி தாக்கி நடந்த இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. … Read more

Ponniyin Selvan 2 Mistakes: பொன்னியின் செல்வன் 2வில் மணிரத்னம் செய்த மன்னிக்க முடியாத 5 தவறுகள்!

சென்னை: பொன்னியின் செல்வன் 2ம் பாகம் இன்று வெளியான நிலையில், ரசிகர்கள் அந்த படத்தை பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர். ஆனால், பொன்னியின் செல்வன் 5 பாகங்களையும் புத்தங்களாக படித்து பலமுறை அந்த கதையில் ஊறி திளைத்து இருந்த ரசிகர்களுக்கு இயக்குநர் மணிரத்னம் இஷ்டத்துக்கு கதையை சற்றே மாற்றியது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்திலேயே அதற்கான கார்டு வாம்மா மின்னல் என்கிற ரேஞ்சுக்கு வந்து போன நிலையில், அதை கவனிக்காமல் படத்தை பார்த்தவர்களுக்கு எல்லாம் கிளைமேக்ஸில் … Read more

விவசாயத்துறை மற்றும் தோட்டப்பகுதிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுரை

விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்சாங்கம் அர்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தோட்டப் பகுதி மக்கள் முகம்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவுடன் (PRC) ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காணிப் பிரச்சினை உட்பட விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதோடு, தற்போது தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்ற மகாவலி காணிப் பிரச்சினை … Read more

டிரம்ப் பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை! முன்னாள் அதிபரை எச்சரித்த நீதிபதி

Donald Trump Rape Case In Trial: 30 ஆண்டுகளுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் பத்திரிகையாளர் ஈ ஜீன் கரோல் குற்றச்சாட்டும் முன்னாள் அதிபரின் விளக்கமும்

திமுக ஆட்சி குறித்து அவதூறு.. கைது செய்யப்பட்ட கரூர் அதிமுக நிர்வாகி ஜாமீனில் விடுவிப்பு..!!

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பெரியவடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவலடி கார்த்திக் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கார்த்திக் சமீபத்தில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுகவினர் அளித்த புகாரின் பேரில் கரூர் மாநகர போலீசார் நவலடி கார்த்திக் மீது … Read more

தமிழ்நாட்டில் கேனில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் தரமாக உள்ளதா : கண்காணிக்க உத்தரவு..!!

சென்னையில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல நிறுவனங்கள் தரமற்ற தண்ணீரை கேனில் அடைத்து விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் கேனில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் தரமாக உள்ளதா என கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், குளிர்பானங்களை சோதனைக்கு உட்படுத்தப்படும். செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கொரோனாவுக்கு பின் மாரடைப்பு … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர்: சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு… கூலித்தொழிலாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை!

இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த கூலித்தொழிலாளிக்கு, வாழ்நாள் சிறைத் தண்டனை அளித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய அரசு சிறப்பு வழக்கறிஞர் ஜெ.கலா, “காரியாப்பட்டி தாலுகா, அரசகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (59). கூலித்தொழிலாளியான இவர், மது போதைக்கு அடிமையானவர். இந்த நிலையில், 19.11.2022 அன்று அந்தப் பகுதியிலுள்ள மந்தைவெளிக்கு மதுபோதையில் தனசேகரன் சென்றிருக்கிறார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் இருவரைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று, அவர்களிடம் … Read more

கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண்.. கயிறை பற்றியபடி விடிய விடிய தத்தளிப்பு.. பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்..

கோபிச்செட்டிபாளையம் அருகே, நள்ளிரவில் கிணற்றுக்குள் தவறி விழுந்து கயிற்றை பிடித்தப்படி தத்தளித்துவந்த பெண்ணை மறுநாள் காலை தீயணைப்புத்துறையினர் வந்து வெளியே மீட்டனர். தாசம்பாளையத்தைச் சேர்ந்த மல்லிகா, நள்ளிரவு 2 மணியளவில், வீட்டிற்குள் வெட்கையாக இருந்ததால் காற்று வாங்க அருகே இருந்த பொதுகிணற்றின் சுற்றுச்சுவர் மீது அமர்ந்துள்ளார். அப்போது, எதிர்பாராவிதமாக கால் இடறி கிணற்றுக்குள் அவர் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. 80 அடி ஆழ கிணற்றில் 20 அடி வரை தண்ணீர் இருந்த நிலையில், மோட்டார் கயிற்றை பற்றியபடி … Read more