பாலியல் குற்றச்சாட்டு | பிரிஜ் பூஷன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும்: டெல்லி போலீஸ் உச்ச நீதிமன்றத்தில் பதில்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை கூறி போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட உள்ளதாக டெல்லி போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக … Read more

TNPSC: குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது.. முதன்மை தேர்வு எப்போது.?

குரூப் 1 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. பொது தேர்வு – தேர்தலுக்கு நிகரானது…! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி டிஎன்பிஎஸ்சி தமிழக அரசு சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (TNPSC) தேர்வு நடத்தி ஆட்சேர்ப்பு நடத்தி வருகிறது. அரசு பணிகளைப் பொறுத்து 8 வகைகளில் குரூப் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் குரூப் 1 தேர்வில் பல்வேறு அரசு பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. பஞ்சாயத்து உதவி இயக்குனர், கூட்டுறவுத்துறை துணை சரகப்பதிவாளர், … Read more

பூரி டூ ஹௌரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ஒடிசாவில் முதல் பயணம் எப்போது?

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதான் இந்தியாவின் அதிவேக ரயில் என்று புகழப்பட்டு வருகிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு Made in India திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது. பிரதமர் மோடியே முன்னின்று அனைத்து ரயில் சேவைகளையும் தொடங்கி வைத்து வருகிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அடுத்த மூன்று ஆண்டுகளில் 400 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய … Read more

Ayalaan: இந்திய சினிமாவிலேயே முதல்முறை…பிரம்மிக்கவைக்கும் அயலான் படத்தின் கதை..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மண்டேலா என்ற தேசிய விருதை பெற்ற படத்தை இயக்கிய அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது படபிடிப்பெல்லாம் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதையடுத்து இப்படம் ஆகஸ்ட் மாதம் திரையில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் … Read more

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான வாக்கெடுப்பை பகிஷ்கரிக்கும் கூட்டமைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விரிவான நிதிக் கடன் வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான வாக்கெடுப்பு  நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(28.04.2023)  நடைபெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நாடாளுமன்ற விவாதம் மூன்றாவது நாளாக இன்று காலை ஆராம்பமாகியது. இந்த வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக பங்குபற்றாக சூழ்நிலை இருப்பதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன. தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு அழுத்தம் இதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதே கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினாரால் வாக்களிக்க … Read more

உயிர் உங்களுடையது தேவி… குந்தவை எனும் ஐயன் லேடி – மறக்க கூடாதா சோழர் குல இளவரசி!

Ponniyin Selvan Kundhavai: ராஜ ராஜ சோழன் குறித்தும், அருண்மொழிவர்மன் குறித்தும் புகழ் மாலைகள் சூழ்ந்திருக்கும் வேளையில், அவர்களை போலவே நினைவுக்கூற தகுந்தவர் எனில், அது குந்தவை தான். மற்ற இளவரசிகளை போன்றில்லாமல், குந்தவைக்கு என்று இருக்கும் மாண்புகளால் தான் அவர் தனித்து அறியப்படுகிறார். 

DC Player: டெல்லி கேபிடல்ஸ் அணி விருந்தில் பெண்களை சீண்டிய கிரிக்கெட்டர் யார்?

பார்ட்டியில் பெண்களிடம் நட்சத்திர வீரர் தவறாக நடந்து கொண்டதால் டெல்லி கேபிடல்ஸ் கடுமையான நடத்தை விதிகளை வெளியிட்டது என்று கூறப்படுகிறது. கடந்த திங்கட் கிழமையன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்ற பிறகு நடத்தை விதிகள் வெளியிடப்பட்டன. ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம், இந்த வெற்றி பெறுவதற்கு சில நாட்களுக்கு முன், ஒரு ஃபிரான்சைஸ் பார்ட்டியில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. பார்ட்டியில் ஒரு பெண்ணிடம் கிரிக்கெட் வீரர் ஒருவர் முறைகேடாக நடந்து கொண்டதை … Read more

சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி… காரில் வைத்து பிரசவம் பார்த்த தன்னார்வலர்கள்..!

சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் கர்ப்பிணி பெண் ஒருவர் காரில் குழந்தை பெற்றுள்ளார். அங்கு 2 வாரங்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரால் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கிழக்கு நைல் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த மனைவியை அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். வழியில், மருத்துவ சேவையாற்றி வந்த தன்னார்வலர்கள் 3 பேர் காரில் வைத்தே கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அப்பெண் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு தன்னார்வலர்களை பெற்றோர் … Read more

கோதுமை மா, முட்டை இருக்கா? ருசியான பரோட்டோ செய்து சாப்பிடுங்க

 தினமும் இட்லி தோசை என்று சாப்பிடாமல் ஏதாவது வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் மகிழ்ச்சி தான். பெரும்பாலும் குழந்தைகள் எல்லாம் முட்டை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஆகவே முட்டையை வைத்து இலகுவாக எப்படி சுவையான ரொட்டி செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் கோதுமை மா – 01கப் உப்பு – தேவையானளவு தண்ணீர் எண்ணெய் முட்டை கொத்தமல்லி வெங்காயம் மஞ்சள் பச்சை மிளகாய் கறிவேப்பிலை மிளகுதூள் செய்முறை ஒரு பாத்திரத்தில் மா மற்றும் உப்பு சேர்த்து போதுமானளவு தண்ணீரும் … Read more

மேன்மக்கள் வசதிக்காக மதுபானம் வாங்க டாஸ்மாக் எலைட் கடையில் ஏ.வி.எம் வசதி அறிமுகம்… வீடியோ

சென்னையில் உள்ள டாஸ்மாக் எலைட் கடையில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் எலைட் கடையில் இந்த இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. மதுபிரியர்கள் தங்களுக்குத் தேவையான மதுவகையை தொடுதிரை மூலம் தேர்ந்தெடுத்த பின் பணம் செலுத்தும் வசதி உள்ளது.   தாங்கள் தேர்ந்தெடுத்த மதுவகைக்கான பணம் செலுத்தியபின் இயந்திரத்தில் இருந்து வெளியில் வரும் அந்த மதுவகையை பெற்றுக்கொள்ளலாம். இதற்கான வரவேற்பை பொறுத்து மேலும் … Read more