ஆஞ்சநேயருக்கு மாலை போட்டுக்கொண்டு பள்ளி சென்ற மாணவனை வகுப்பில் சேர்க்க மறுத்து வீட்டுக்கு அனுப்பிய பள்ளி நிர்வாகம்

தெலுங்கானாவில் ஆஞ்சநேயருக்கு மாலை போட்டுக் கொண்டு சென்ற மாணவனை பள்ளிக்கு வர தடை விதித்த நிர்வாகத்தின் செயலைக் கண்டித்து ஆஞ்சநேயர் பக்தர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதிலாபத் மாவட்டம் உண்டூரில் இயங்கி வரும் செயிண்ட் பால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவன் அபினவ் ஆஞ்சநேயருக்கு மாலை போட்டு காவி ஆடை அணிந்த படி பள்ளி சென்றுள்ளான். இதனால் அபினவ்வை பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்த நிர்வாகம் சீருடையுடன் வருமாறு கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதுபற்றி … Read more

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி

இந்திய மாநிலம் ஹரியானாவில் கார் விபத்தில் ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. திருமண நிகழ்ச்சி ஹரியானாவின் ஹிசர் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சாஹர், சோபித், அரவிந்த், அபினவ், தீபக், அசோக் மற்றும் புனேஷ் ஆகிய இளைஞர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அனைவரும் ஒரே காரில் தங்கள் ஊர்களுக்கு பயணித்தனர். கார் அரோகா – அடம்பூர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே பலி இதனால் சாலையோரத்தில் … Read more

கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் பகுதியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு சொத்து தகராறில் அண்ணனை கொன்ற தம்பி கைது

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் பகுதியில் சொத்து தகராறில் அண்ணன் வெங்கடேஷை (30) சுட்டுக்கொன்ற தம்பி சந்திரன் கைது செயப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த துப்பாக்கியை போலீசார் தேடி வருகின்றனர்.

ம.பி. கோயில் விபத்தில் பலி எண்ணிக்கை 35ஆக அதிகரிப்பு

இந்தூர்: மத்தியப்பிரதேசத்தில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.  மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் படேல் நகரில் உள்ள பழமைவாய்ந்த பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் கோயிலில் ராமநவமி விழாவின்போது கிணற்றின் மீது இருந்த சிலாப் உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருகின்றது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் … Read more

போபால் – டெல்லி இடையே 11வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. குறைகிறது பயண நேரம்

India oi-Halley Karthik போபால்: நாட்டின் 11வது வந்தே பாரத் ரயிலை மத்திய பிரதேசத்தின் போபாலிருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். இந்த ரயில் டெல்லி வரை இயக்கப்படுகிறது. சாதாப்தி ரயிலுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘வந்தே பாரத்’ எதிர்பார்த்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ரயில் சேவை உருவாக்கப்பட்ட பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக நவீனமயமாக்கப்பட்டது. அப்படி வந்ததுதான் சதாப்தி. சதாப்தி … Read more

கர்நாடகா சட்டசபை தேர்தலை முன்னிட்டு கட்சி தாவல் ஜரூர்! | Ahead of the Karnataka assembly elections, party jump is necessary!

பெங்களூரு, ஏப். 1- கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கட்சி தாவல் ஜரூராக நடக்கிறது. பா.ஜ., – ம.ஜ.த.,வின் எம்.எல்.ஏ.,க்கள் இருவர், நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்கள், காங்கிரசில் இணைய திட்டமிட்டுள்ளனர். கருத்து கணிப்பில் காங்கிரஸ் கை ஓங்குவதால், மற்ற கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அங்கு ஓட்டம் எடுக்கின்றனர். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., அரசு நடக்கிறது. இந்த அரசின் பதவிக்காலம், மே 24ம் தேதி முடிகிறது. 224 உறுப்பினர்களை கொண்ட, … Read more

Viduthalai: பெண்ணின் நிர்வாணம் உங்களை அழ வைக்குமா? விடுதலை பட காட்சியை பாராட்டும் பெண்கள்!

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, பவானிஸ்ரீ, விஜய்சேதுபதி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இளையராஜா இசையமைத்திருக்கும் விடுதலை முதல் பாகம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. விடுதலை படத்தை பார்த்த பலரும் அந்த படத்தை பாராட்டி வருகின்றனர். சிலர், சுமார் ரகம் தான் என்கிற நெகட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து ஒரு நாள் முழுக்க #ViduthalaiPart1 ஹாஷ்டேக் சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கிலே இருக்கிறது. விடுதலை – வெற்றி வெற்றிமாறன் … Read more