திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

இன்று  திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கும் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெற்று … Read more

இனி ஆன்லைன் கேமிங்-ல் வெற்றிபெற்ற பணத்திற்கு 30% வரி..!!

ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து வருகிறது என்று சொன்னால் மிகையாகாது. இதில் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள இளைஞர்கள் எப்படியாவது பணம் சம்பாதித்திட வேண்டும் என்ற ஆசையில் கையில் இருக்கும் குறைந்த பணத்தை முதலீடு செய்து விளையாடுகின்றனர்.ஆனால் ஆன்லைன் கேமிங் மூலம் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமில்லை. ஒரு சிலரே குறைந்த முதலீட்டில் நல்ல லாபத்தை பெறுகின்றனர். அதை நம்பி பலரும் அதில் பணம் கட்டி விளையாடி … Read more

கலாஷேத்ரா விவகாரம் – உதவி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு!!

கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் மாணவிகள் குற்றசாட்டுகளை எழுப்பினர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ மாணவிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்தது. இந்த நிலையில் ஏப்ரல் ஆறாம் தேதி வரை கலாக்ஷேத்ரா நடன பள்ளிக்கு விடுமுறை … Read more

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ‘இம்பேக்ட் பிளேயர்’ என்ற புதிய விதி அறிமுகம்..!!

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ‘இம்பேக்ட் பிளேயர்’ என்ற புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி டாஸ் வென்ற பின் வழங்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலுடன் மாற்று வீரர்கள் 5 பேரின் பெயர்களையும் வழங்க வேண்டும். இதில் இருந்து ஒரு வீரரை ஆட்டத்தின் நடுவே பந்து வீச்சிலோ, அல்லது பேட்டிங்கிலோ மாற்று வீரராக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வகையில் ஏற்கெனவே 4 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையின் கீழ் வெளிநாட்டு வீரரை … Read more

“திருக்குறளை தேசிய நூலாக அறிவியுங்கள்" – மத்திய அரசை வலியுறுத்தி புதுவை சட்டசபையில் தீர்மானம்

திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ அனிபால் கென்னடி தனிநபர் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், “திருக்குறள் நம் நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒரு அற்புத நூலாகும். 14 ஐரோப்பிய மொழிகள், 10 ஆசிய மொழிகள், 14 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ஒரு உன்னத நூல். எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சிறந்த மறைநூல். புதுச்சேரி … Read more

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு பரிகாரம் செய்வதாக ரூ.65 லட்சம் மோசடி.. மாந்திரீக தம்பதி உட்பட 3 பேர் கைது.!

திண்டுக்கல் அருகே, மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு பரிகாரம் செய்வதாக கூறி 65 லட்சம் ரூபாய் மோசடி செய்த மாந்திரீக தம்பதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த அருள் மணிகண்டன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் அதற்கு பரிகாரம் செய்வதாக கூறி அவரது மனைவியிடம்  தேவதானப்பட்டியை சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகரன் அவரது மனைவி விஜி  ஆகியோர் 65 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர். அருள் மணிகண்டனின்  மனநிலையில் மாற்றம் ஏதும் இல்லாத நிலையில் அவரது … Read more

தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் ரூ.10-ல் இருந்து ரூ.60 வரை கட்டணம் உயர்வு

செங்கல்பட்டு/சென்னை: தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.10-ல் இருந்து, அதிகபட்சமாக ரூ.60 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் பெரிதும் கவலைக்கு உள்ளாகி உள்ளனர். நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்றுதேசிய நெடுஞ்சாலைகள் திட்டஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதன்படி, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பரனூர் … Read more

சர்வதேச தரத்தில்.. 'விடுதலை' படத்தை இன்ச் பை இன்ச்சாக பாராட்டி தள்ளிய ப்ளூ சட்டை மாறன்.!

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுக்களை அள்ளி வருகிறது. தனது முந்தைய படங்களை போல இந்தப்படத்தினையும் சமூக அக்கறையுடன், காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தை கேள்வி கேட்கும் விதமாக உருவாக்கியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வரும் ‘விடுதலை’ படம் விமர்சகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே இயக்கியது போல் இந்தப்படத்தையும் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன். ஜெயமோகனின் ‘துணைவன்’ நாவலை தழுவி … Read more

ஏப்ரல் முதல் நாளே சூப்பர் செய்தி: அதிரடியாக குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை

வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு: இன்று (ஏப்ரல் 1ம் தேதி) புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் அரசு பெரிய பரிசை வழங்கியுள்ளது. எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறைந்துள்ளது. வணிக பயன்பாடு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை அரசு குறைத்துள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால் மக்களுக்கு பெரிய அளவிலான நிம்மதி கிடைத்துள்ளது. கடந்த மாதம்தான் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.350 அதிகரித்தது. தற்போது … Read more

போபால் – டெல்லி இடையே 11வது வந்தே பாரத் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

போபால் – டெல்லி இடையேயான 11வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். மத்தியப் பிரதேசத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, ராணி கம்லாபதி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்கிறார். 708 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் 8 மணி நேரத்திற்குள் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போபாலில் உள்ள குஷாபாவ் தாக்ரே ஹாலில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஒருங்கிணைந்த ராணுவத் தளபதிகள் மாநாட்டில் பிரதமர் … Read more