சார்லஸ் மன்னர் அழைப்பை ஜனாதிபதி ஜோ பைடன் நிராகரிக்க வாய்ப்பு: வெளிவரும் புதிய தகவல்

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்க வாய்ப்பில்லை என்றே புதிய தகவல் வெளியாகியுள்ளது. முக்கியஸ்தர்களின் குழு சார்லஸ் மன்னரின் அழைப்பை ஜோ பைடன் ஏற்க மறுக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. முடிசூட்டு விழா முன்னெடுக்கப்படும் மே 6ம் திகதி இன்னொரு விழாவில் பங்கேற்கும் பொருட்டு ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டதாகவும், இதனால் லண்டன் விழாவில் ஜோ பைடன் பங்கேற்பதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். @AP இருப்பினும், பிரித்தானிய மன்னர் ஒருவரின் … Read more

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!

திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திகழ்கிறது. இந்த கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 48 நாட்கள் நடைபெறும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு பங்குனி உத்திர விழா … Read more

கனரக வாகனங்களுக்கான கட்டாய தகுதி சோதனை கெடு 18 மாதம் நீட்டிப்பு

புதுடெல்லி:  கனரக சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் 2023 ஏப்ரல் 1ம் தேதி முதல் தானியங்கி சோதனை நிலையங்களில் (ஏடிஎஸ்) கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மேலும், நடுத்தர சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் 2024 ஜூன் 1ம் தேதி முதல் கட்டாய தகுதி சோதனைக்கு உட்படுத்த வேண்டுமெனும் உத்தரவிடப்பட்டிருந்தது. கனரக வாகனங்களுக்கான கட்டாய தகுதி பரிசோதனை செய்யும் திட்டம் … Read more

ஓபிஎஸ் பாஜக அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம்..'இல்லையென்றால்'..அர்ஜூன் சம்பத் ஐடியா

Tamilnadu oi-Mani Singh S திருச்செந்தூர்: ஏற்கனவே முதல்வராக இருந்தவர் ஓ பன்னீர் செல்வம் அவர் பாரதிய ஜனதா அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம். இல்லையென்றால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு அவருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜூன் சம்பத் கூறினார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஒருபக்கம் கடுமையான சட்ட போராட்டங்களை … Read more

விடுதலை இரண்டாம் பாகம் எப்படி இருக்கும்… முதல் பாகத்தில் வெற்றிமாறன் கொடுத்த லீட்!

சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், சேத்தன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. விடுதலை முதல் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனால் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், அது எப்படி இருக்கும் என பார்க்கலாம். விடுதலை முதல் பாகம் வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் … Read more

குட் நியூஸ்.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா.?

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.76 குறைந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.2268 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது … Read more

வெற்றியுடன் கணக்கை தொடங்கிய குஜராத்!!

ஐபிஎல் சீசன் 16இல் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றியுடன் தனது கணக்கை தொடங்கியுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணியில் மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இதையடுத்து சென்னை … Read more

வெளி உலக தொடர்பு இல்லாமல் 3 ஆண்டுகள்… வீட்டுக்குள்ளே பூட்டப்பட்டார்களா 3 மகன்கள்?! தாயிடம் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கானாங்குளத்தங்கரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(52). கேரளாவில் கட்டட வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பிரேமா (46). இவர்களுக்கு அருண் (20), அனீஸ் (18), அஜின் (15) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அருண் 12-ம் வகுப்பும், அனீஸ் 11-ம் வகுப்பும், அஜின் 6-ம் வகுப்பும் படித்துள்ளனர். இவர்களுடன் பிரேமாவின் தாய் வசந்தா (74), அண்ணன் ஜோதி (50) ஆகியோரும் வசித்து வருகின்றனர். ஜோதிக்கு திருமணம் ஆகவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த … Read more