கோலாகலமாக நடைபெறும் பூரம் திருவிழா!!

கேரள மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற பூரம் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. கோவிலின் முன் பகுதயில், ஓயாமல் ஒலிக்கும் பஞ்சவாத்திய மேளத்தில் தொடங்கி சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து வெடிக்கும் வாண வேடிக்கை நிகழ்ச்சியுடன் நாளைய காலை நிகழ்ச்சி முடிவடைகிறது. 2 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருவிழாவில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட யானைகளின் ஊர்வலம் திருவம்பாடி ஸ்ரீ … Read more

CSKvPBKS : பெவிலியனிலிருந்து மெசேஜ்; அம்பயருடன் உரையாடல்; கடைசி பந்தில் பலே திட்டம்!

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. கடைசிப் பந்து வரை சென்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. CSKvPBKS போட்டி பரபரப்பை எட்டி கடைசிப் பந்துக்கு சென்றிருந்த நிலையில், பஞ்சாப் அணியின் சார்பில் க்ரீஸில் நின்ற ராசாவும் ஷாருக்கானும் நடுவரிடம் சென்று சில நிமிடங்கள் எதையோ விவாதித்தனர். இருவரும் நடுவரிடம் பேசியதற்கு பின்னால் ஒரு பலே திட்டம் இருந்தது இப்போது தெரிய வந்துள்ளது. பதிரனா வீசிய … Read more

''அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதவியை பறிக்கக் கூடாது'' – ஹெச். ராஜா வலியுறுத்தல்

பழநி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதவியை பறிக்கக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தமிழ்நாடு பிரமாண ஸமாஜம் சார்பில் நடைபெற்ற பிராமண குடும்ப ஸ்ம்மேளன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ”கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவைச் … Read more

'போலியான வாக்குறுதிகளை அளித்து கர்நாடக விவசாயிகளை ஏமாற்றி வருகிறது காங்கிரஸ்' – தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பீதர்: கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பீதர் நகரில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பாஜக ஆட்சியில் கர்நாடக மாநிலம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் இதற்கு முன்பு இங்கு ஆட்சி செய்த, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகள் மக்களை ஏமாற்றின. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை அந்தக் கட்சிகள் நிறைவேற்றவில்லை. தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை பாஜக நிறைவேற்றி வருகிறது. காங்கிரஸ் முற்றிலும் … Read more

'செல்லம் என் சிங்கமே'… கஸ்தூரியை வம்புக்கு இழுத்து வாங்கிக்கட்டிய திமுக நிர்வாகி!

தமிழகத்தில் அடுத்தடுத்து உலுக்கி வரும் கொலை சம்பவங்கள் திமுக அரசுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் திருக்கழுக்குன்றம் ருத்திரான் கோயில் தெருவை சேர்ந்த சர்புதீன் (40) என்பவரை நேற்று பட்டப்பகலில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்து தப்பியது. இவர் திருக்கழுக்குன்றத்தில் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி … Read more

AK62: AK62 படத்தில் அது கிடையவே கிடையாதாம்..ஹாலிவுட் தரத்தில் அசத்தப்போகும் அஜித்..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் அஜித் தற்போது மகிழ் திருமேனியின் இயக்கத்தில் AK62 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதமே துவங்குவதாக இருந்த நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மகிழ் திருமேனியை AK62 படத்தின் இயக்குனராக தேர்வு செய்து அவரை முழு கதையையும் தயார் செய்யுமாறு கூறியுள்ளார் அஜித். எனவே தான் இபபடத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக தாமதம் என கூறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து … Read more

விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸார்! வெளியான அறிவிப்பு

நாட்டில் நாளை (01.05.2023) நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களின் நிமித்தம் பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  3,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில்  இதன்படி, குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  கொழும்பில் நடைபெறும் மே … Read more

விஜய், அஜித் படங்களை போல் வசூலை குவித்த நெல்லை ரயில் நிலையம்… வரப்போகும் புதிய வசதிகள் என்ன தெரியுமா?

Tirunelveli Railway Station: 2022 – 2023 நிதியாண்டில் முதல் முறையாக, திருநெல்வேலி ரயில் நிலையம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது. இதன்மூலம், நெல்லை ரயில் நிலையத்திற்கு கிடைக்கப்போகும் புதிய வசதிகள் குறித்து இதில் காணலாம்.

ஆப்ரேஷன் காவேரி: சூடானிலிருந்து மேலும் 229 பேர் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

ஆப்ரேஷன் காவேரியின் கீழ், விமானம் மூலம் மேலும் 229 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர். ஜெட்டாவிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட இந்தியர்கள் பெங்களூரு வந்தடைந்தனர். இதன்மூலம் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானிலிருந்து இதுவரை சுமார் ஆயிரத்து 954 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூடான் துறைமுகத்திலிருந்து இந்தியர்களை மீட்டு வரும் பணியில் கப்பற்படையின் ஐஎன்எஸ் தேஜ் கப்பல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. Source link

கடைசி பந்தில் டுவிஸ்ட்! சென்னையின் வெற்றியை தட்டிப்பறித்த வீரர்..வாகைசூடிய பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல்லின் 41வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. தெறிக்கவிட்ட கான்வே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் CSK மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ஓட்டங்கள் குவித்தது. டெவோன் கான்வே 92 ஓட்டங்களும், கெய்க்வாட் 37 ஓட்டங்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பத்திலேயே அதிரடி காட்டியது. தவான் 28 ஓட்டங்களில் அவுட் … Read more